உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 வாழையடி வாழை

தில்லை; அப்படிக் காணப்பெறினும், ஆண்கள் மயிர்களை இழக்கும் அளவுக்கு அவர்கள் இழப்பதில்லை. இதற்குக் காரணம என்ன?

‘பால் வரையறை” (Sex-limited) ஜீன் என்ற ஒருவகைத் தீய ஜீன் இருப்பதாகவும், சாதாரண வழுக்கை விழுவதற்கு இவ் வகை ஜீனின் ஓர் இணையே மரபுவழியாக இங்கிலையை உண்டாக்குகின்ற தென்றும கால்வழியியலறிஞர்கள் கருதுகின்றனர். பால்-இணைப்பு ஜீன்களைப் போலன்றி பால்-வரையறை ஜீன் X-நிறக்கோலில் சுமந்து செல்லப்பெறுவதில்லை; அஃது இருபாலாருக்கும் பொதுவாக வுள்ள ஏதாவது ஒரு நிறக்கோலில் சுமந்து செல்லப்பெறுகின்றது. எனவே, வழுக்கைக்குக் காரணமாகவுள்ள ஜீன் இருபாலார் வழியாக வும் இறங்குகின்றது. ஆனால் இருபாலாரிடையேயும் அஃது ஒரே மாதிரியாகச் செயற்படுவதில்லை. அஃது ஆணிடம ஓங்கிநிற்கும் ஜீனாகச் செயற்பட்டு வழுக்கை மண்டையை விளைவித்துவிடுகின் றது. பெண்ணிடம் அது வரையறை செய்யும் பின்தங்கும்-ஜீனாகச் செயற்படுகின்றது. இவ்வாறு கோடுவதற்கு ஆண்-ஹார்மோன் களே காரணம் என்று சோதனைகள் மூலம் கண்டுள்ளனர். ஆயினும் வழுக்கைக்குக் காரணமான ஜீன் இவ் விளைவிற்கு மிகவும் இன்றி யமையாதது.

டாக்டர் ஹாமில்ட்டன் என்பார் படத்தில் (படம்-47) கண்டவாறு வழுக்கை மண் ைடகளை எடடு விதமாக வகைப்படுத்திக் காட்டி யுள்ளார்.

டாக்டர் ஹாமில்ட்டன் கண்ட உண்மைகளிலிருந்து பெண் களிடம் வழுக்கை சரியாக ஏற்படாததையும் ஆனால் அதற்குரிய நிலையினை மட்டிலும் (4-ஆவது வகை) பெறுகின்றனர் என்பதை யும் அறிகின்றோம்.

ஒரு குறிப்பிட்டவரிடம் வழுக்கை உண்டாகுமா என்பதை முன்னதாகவே அறியமுடியுமா? ஆம் ஓரளவு அறிந்துகொள்ள லாம். தந்தையிடம் வழுககை இருப்பின் அவருடைய மைந்தர்களில் பாதிப்பேரிடம் வழுக்கை ஏற்பட வாய்ப்புண்டு. அவருடைய மனைவியின் கால்வழியில் ஆண்களிடம் வழுக்கை வழக்கமாகக் காணப்பெறின் இந்த வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும். ஒருவருடைய பெற்றோரிடம் “இரண்டு - வழுக்கை ஜீன்கள்’ வகையினரா. “ஒரு