உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$78 வாழையடி வாழை

யுச்சியில் வழுக்கையுள்ள இடம் சிறிதளவு தென்படும்.) பென் களிடம் இந்நிலைக்குமேல் வழுக்கை ஏற்படுவது அரிது. 5. தலையுச்சியில் வழுக்கை இடம் அதிகமாக இருக்கும்;

நெற்றிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் (சாதாரணமாகக் கிழவர்களிடம்) அதிகமாக மயிர் உதிர்ந்து இருக்கும். 6. நெற்றியிலிருந்து உச்சிவரையிலும் தொடர்ந்தாற்போல்

வழுக்கை காணப்பெறும். 7. தலையுச்சியின் குறுக்கே “பளபளப்பான” இடம்; ஆனால்

இடையிடையே அரிதாக மயிர்கள் காணப்பெறும். 8. தலைமுழுதும் வழுக்கையே; காதுகட்கு மேலும் பின்புறம்

முதுகிற்கு மேலும் அரிதாக மயிர் காணப்பெறும்.

வழுக்கை ஜீனை உடையவர்களா? ‘வழுக்கையில்லாத ஜீனை’ உடையவர்களா? என்பதைப் பொறுத்தே வழுக்கைப்பண்பு இறங்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அவருடைய தாய்வழியாகவும். தந்தை வழியாகவும் உள்ள ஆண்களை மட்டிலும் கூர்ந்து நோக்கியும், அவருடைய மூத்த சகோதரர்களை உற்று நோக்கியும் உத்தேசமாக ஊகம் செய்து கூறி விடலாம். வழுக்கை மரபுவழியாக எப்படி இறங்குகின்றது என்பதைப் படங்கள் (படம்-48) விளக்குகின்றன.

இப் படங்களைச் சிறிது விளக்குவோம். முதல்வகை: ஆணிடமும் பெண்ணிடமும் வழுக்கையையுண்டாக்கும் இரண்டு ஜீன்கள் உள்ளன. இந்தவகை ஆணின் ஆண்பிள்ளைகள் யாவரும் வழுக் கையைப் பெறுவர். இந்த ஆணின் மனைவியும் இவ்வகையைச் சேர்ந்தவளாக இருப்பின் பெண்பிள்ளைகட்கும் வழுக்கை ஒரளவு அமையும். இந்தவகைப் பெண்ணிடம் தலைமயிர் நெருங்கி அமைக் திராது; அல்லது ஓரளவு வழுக்கை தென்படலாம். இவளுடைய ஆண்பிள்ளைகள் யாவரும் வழுக்கைத் தலையர்களாக இருப்பர். இரண்டிாம்வகை : ஆணிடமும் பெண்ணிடமும் வழுக்கையினை விளை விக்கும் ஒரு ஜீன்தான் உள்ளது. இந்தவகை ஆணிடம் இரண்டு ஜீன் கள் இருந்தால் என்ன விளைவினை உண்டாக்குமோ, அதே விளை வினையே ஒரு ஜீன் உண்டாக்கும். ஆயின், இவருடைய ஆண் பிள்ளைகளில் இருவருக்கு ஒருவர்வீதம் வழுக்கை மண்டையை