பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் சார்ந்த குறைபாடுகள் 189)

லும், பல குறைகள் குறைவான பார்வையிலிருந்து முழுக் குருடு வரையிலும் கொண்டு செலுத்தும் தன்மையுள்ளவை.

மரபுவழியாகப் பெறும் குருடுபற்றிய சதவிகிதம் இன்னும் உறுதிப்படவில்லை. பெரும்பாலான குருடுகள் இரகசிய நோய் களாலும்’ வேறு .ெ த ா ற் று க ள லு ம் பிறப்பதற்கு முன்னரே ஏற்படுகின்றன. மரபுவழியாக வரும் பலவகைக் குருட்டு நிலைகள் குமரப்பருவத்திற்குப் பின்னரே தெரிகின்றன. விழித்திரை, கண்திரை.” கண் பொறி நுட்பத்தின் வேறு முக்கியப் பகுதி சரிவர அமைவதற்கு ஜீன்கள் வழி காட்டத் தவறுவதால் பிறக்குங் காலத்தில் மரபுவழியாக வரும் சில குறைபாடுகள் இருக்கலாம். வேறு சில குருட்டு நிலை கள் கண்வில்லை,” கண்ணரம்புகள், கண்விழி’ முதலியவற்றைத் தாக்கும் மரபுவழியாக நேரிடும் வேறு கண் குறைகளின் பின் விளை வுகளாக ஏற்பட்டு அரைகுறைக் குருட்டு நிலையை உண்டாக்கு கின்றன.

கண்படலம்” என்ற நோய், கண் வில்லை ஒளித்தடையாகப் போவதால் ஏற்படுவது. பெரும்பான்மையோரிடம் தீவிரம் குறைந்த கிலையில் ஏற்படும் இந் நோயால் யாதொரு தீங்கும் விளைவதில்லை. பிறப்பதற்கு முன்னர் தாயிடம் ஏற்படும் சில நோய்களால் (எ-டு. ஜெர்மன் மணல்வாரி அம்மை) சிலரிடம் பிறவிசார்ந்த கண்படலமும், பிற்காலததில் ஏற்படும் இந் நோய் சில தொற்றுடன் முதுமைப் பரு வத்தினால் நேரிடும் சீர்கேட்டினாலும் உண்டாகின்றது. எனினும், பிறவிசார்ந்த எல்லாக் கண்படல வகைகளும், முதுமைப் பருவத் திற்கு முன்னதாகத் தாமாக ஏற்படும் இந் நோய் வகைகளும் மரபு வழியாக வருகின்றன என்றும், இவை சாதாரணமாக ஓங்தி நிற்கும்

g|Jessful G|Brlsir - Venereal diseases. விழித்திரை - iris.

& Sohrsos - Retina.

Soisbonsu - Lens.

&Sorsogs - Eye ball. & sort L60th - Cataract.