பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வாழையடி வாழை

ராகவும் இருக்கலாம். ஆனால் ஒழுங்காகச் செயற்படும் அவரு டைய சிந்தனை செய்யும் பொறிநுட்ப அமைப்பில் படிப்படியாகவோ, அல்லது திடீரென்றோ நேரிடும் பிளவுமாற்றத்தினால் இந்நிலை விளைகின்றது. ஆயினும், ஒருவர் மனக்குறைவுடையவராக இருப்பது, அவருடைய கீழ்த்தரமான (Inferior) மூளையைப் பொறுத்தது. இங்கிலை அவரது மூளை கெட்டுப்போனதால் ஏற்பட்ட விளைவன்று. தொடக்க கிலையில் ஏற்பட்ட இடையூறின் விளைவாகவோ அல்லது மூளையின் குறையுடைய அமைப்பின் காரணமாகவோ இங்கிலை அவருக்கு நேரிடுகின்றது. மூளை செயற்படுவது வரையறைப்படுத்தும் தரத்திற்கேற்ற குறையின் வகையும் அறுதியிடப்பெறுகின்றது. இது பேதையிலிருந்து” மூடன்’ (மட்டி), முட்டாள்’ வரையிலும் செல்லும்.

இனி பல்வேறு மனநிலைகளையும் அவற்றில் மரபுவழியும் சூழ்நிலையும் தொடர்புகாட்டும் முறையில் எங்ஙனம் பங்குபெறு கின்றன என்பதையும் சற்று விரிவாக ஆராய்வோம். சூழ்நிலைக் கூறுகள் மனநோய்களைக் கொண்டுவருகின்றன, அல்லது முன்னரே யுள்ள மனநோய்களைப் பின்னும் மோசமாக்குகின்றன என்று கண்டறியப்பெற்றுள்ளது. அதே சமயத்தில் மரபுவழியும் பெரும் பாலான கிறுக்கு வகைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினைப் பெறு கின்றது என்பதற்கும், பலவற்றில் முககிய காரணமாகவும் உள்ளது என்பதற்கும் சான்றுகள் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. ஒருவர் யாதோ ஒரு வகையில் உடற்கூற்றமைப்பில் ஊறுபடத்தக்க நிலையில் இல்லாதவரை அவரிடம் கிறுக்கு ஏற்படாதென்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்,

இரண்டாம் உலகப் பெரும் போரில் பங்குகொண்ட போர் வீரர் களை எடுத்துக்கொள்வோம். மிகவும் கொடிய குழ்நிலையில் ஒரு சிறு விகிதமே மனம் உடைந்தனர்; வேறு சில மிக மென்மையான சூழ்நிலையிலும் மனம் உடைந்து போயினர். இவ்வாறு மனம்

8. i jsp;5 - Moron. 9. epi–sr – Imbecile. 10. Upto LTsir - Idiot.