பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த மனமுடையோர் 2 1 7

யாலும், அல்லது தவறாக இனப்படுத்தப்பெறாததாலும், இவர் களுள் சிலவகைகள் இளமையிலேயே மரித்துவிடுவதாலும். இவர் களுடைய எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

இவர்களுள் முட்டாள்கள் சாதாரணமாக நெருப்பு, நீர் முதலிய விபத்துக்களினின்றும்கூடத் தம்மைக் காததுக்கொள்ள முடியாத அளவு உளவாற்றல் குன்றியவர்கள்: உண்ணவும் உடுக்கவும்கூட அறியார் இரண்டொரு சொற்களையே கூறக்கூடியவர்கள்.

மடையர்கள் முட்டாள்களைபபோல உளவாற்றல் குன்றா விடினும் தாங்களாகத தங்கள் வாழ்க்கைச் செயல்களைக் கற்றுக கொளளவே இயலாத நிலையிலிருப்பர்.

இக் குழுவினுள்ள பலவகையினரின் பிறப்பில் பங்கு கொள்ளும் கூறுகள் இன்னும் சரிவர உறுதிசெய்யப்பெறவில்லை யெனினும், பெரும்பாலும் இவர்கள் பிறப்பில் பின்தங்கும் ஜீன்கள்’ காரணமாக இருபபதாகக் கால்வழியியல் நிபுணர்கள் கருதுகின்றனர். பெரும் பாலும் இவர்கள் பூப்படையும பருவத்திற்குமேல் வாழ்வது அரிதாத லாலும் பொதுவாக இவர்கள் மருத்துவமனைகளிலேயே வைக்கப் பெற்றிருப்பதாலும், இவர்களைப் பள்ளிககுப் பொருத்தபபாடு செய்வதிலும், தொழிலகளிலோ, சமூக உறவுகளிலோ அமைவ திலும் பிரச்சினைகள் எழுவதில்லை. அன்றியும், பெரும்பாலான முட்டாள்கள் பாலுறவுகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைவ தில்லை; அல்லது மலடாகவே உள்ளனர். இந்த இருவகையினரில் பெரும்பாலோர் சாதாரணமான நிலையிலுள்ள பெற்றோர்கட்கே பிறக்கினறனர்.

பேதையர்: பேதையர்களோ சாதாரணமாக கேரக்கூடிய விபத்துக்களினின்றும் விலகிக்கொள்ள அறிவர். இவர்கள் சிறிதளவு பேசவும் செய்வர். ஆனால் இவர்களால் எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள முடியாது. நாடோறும் செய்யும் சிறு தொழில்களைக்கூட அறிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், கண்காணிப்பின்றியும் சாதாரண வாழ்க்கைச் செயல்களைச செய்யக் கற்றுக்கொடுகக முடியும். ஒருவாறு இவர்களைச் சமூகத்திற்கு உதவுமாறு பயிற்று விக்கவும் முடியும். முதற்குழுவினரைவிட இவர்களுடைய தொகை