உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 18 வாழையடி வாழை

அதிகம், வாழ்நாளும் அதிகம். இவர்களுள் பெரும்பாலோர் மருத்துவமனைக்கு வெளியில் வாழ்கின்றனர். இவர்களைப் பள்ளிகள். தொழில்கள், சமூக உறவுகள் இவற்றில் பொருத்தப்பாடு செய்வதில் பல பிரச்சினைகள் எழுகின்றன. இவர்களுள் பெரும் பாலோர் மணம் புரிந்துகொண்டு அதிகக் குழவிகளையும் பெறுவார் களாதலின், சமூகத்திற்கு அதிகக் கவலையை உண்டாக்கும் நிலை யிலுள்ளனர். இக் குழவிகளிடம் பிறப்பியல் அடிப்படையில் குறைகள் இராவிடினும், இவைகள் தக்க முறைகளிலும் போற்றி வளர்க்கப்பெறுவதில்லை. எனவே, பேதையர்களின் எண்ணிக்கை அதிகமாவதைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்வது அரசுக்குப் பெரிய பிரச்சினையாகவே இருக்கும்.