உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 28

‘இரண்டுங் கெட்டான்கள்’

ஒரு கணவன் மனைவியரிடையே குழந்தைப் பேறு வேண்டு மென்ற ஆசை இருந்து வந்தது. ஆனால், ஆண் குழந்தை வேண்டுமா, பெண் குழந்தை வேண்டுமா என்ற முடிவு அவர் களிடம் தீராதிருந்தது. இந் நிலையில் அவர்கட்குக் குழந்தைப் பேறு ஏற்பட்டது. ஆனால் அக் குழந்தை ஆணாகவும் இல்லை : பெண்ணாகவும் இல்லை ! இஃது எல்லோரும் அறிந்த ஒரு கதை.

இத்தகைய ‘இரண்டுங் கெட்டான் குழவிகள்’ பிறப்பது உண்டு ; ஆனால் இது பெற்றோர்களின் எண்ணததால் ஏற்படுவ தில்லை. இஃது ஏதோ கால்வழியியல் கூறுகளில் ஏற்படும் மாற்றததால், சூழ்நிலையில் ஏற்படும் நிலைகுலைவினால், நேரிடு கின்றது. இவற்றால் பால் அமைபபில் பலவேறு வகை இயல் பிகந்த தன்மைகள் அல்லது குறைகள் உண்டாகினறன. இயற்கை யின் வினோதத்தால் ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன்’ என்ற நிலையில் ஏதோ ஒரு குழவி தோன்றுகின்றது.

ஆணா ? பெண்ணா ?’ என்ற இயலில் கூறப்பட்டவற்றை ஈண்டு நினைவு கூர்ந்து, சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பிறக்கும். ஒரு குழந்தை கருவாக அமையுங்கால் அஃது அடையும் ‘பால் நிறக் கோல்களின் சோக்கையே ஒரு குழவியின் பாலை அறுதியிடு வதற்குக் காரணமாகின்றது. ஒரு X-நிறக் கோலும் ஒரு Y-நிறக் கோலும் சேர்ந்து ஓர் ஆணை உண்டாக்குகின்றன எனறும், இரண்டு X-நிறக் கோல்கள் சேர்ந்து ஒரு பெண்ணை உணடாக்குகின்றன

1. இரண்டுங் கெட்டான்கள்’ - in-betweeners.