உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுங் கெட்டான்கள் 229

முள்ள சிறப்பியல்புகளையும் விளைவிக்கின்றது : சாதாரணமாக முன்னர் நேரிடும் விரை பபையினுள விரைகள் இறங்கா நிலையை (Cryptorchidism) உண்டாக்குகின்றது. இத்தகைய ஒரு நிலை குட்டை காய் வகைகளிடம் மரபு வழிக் கூறாகக் காணப்பெறினும் (பின்தங்கும் ஜீன்களால் விளைவது) மனிதர்களிடம் இந் நிலை மரபு வழிக் கூறு என்று இன்னும் நிலைநாட்டப்பெற வில்லை. (1946இல் இத்தகைய நிலைகளுள்ள ஒருகரு இரட்டையர் இருந்த தாக மருத்துவக் குறிபபேடு கூறுகின்றது). தொடக்கத்திலேயே அறுவை முறை சிகிசசையை மேற்கொண்டும். ஹார்மோன் சிகிச்சை யாலும் இந் நிலையை மாற்றிவிடலாம், ஆயினும், இக் கிலையி லுள்ள பெரும்பாலோர் மலடாகவே இருப்பர் என்பதை அறிதல் வேண்டும்.

பூப்புப பருவத்திற்குப் பிறகு, சிறப்பாகக் கிழப்பருவத்தில் சுரப்பிகள் செயற்படுவதிலுள்ள மாற்றங்கள் ஆடவர்களிடம் உச்ச சுரக்குரல் வளர்வதற்கோ அல்லது பெண் தன்மையை நோக்கிச செல்வதற்கோ காரணமாகினறன. ஆனால், பூப்புப் பருவத்திற்குப் பிறகு ஆண்களிடம் விரைகளையும் பெண்களிடம் சூற்பைகளை நீக்குதல் பாலுறுபபுகள் செயற்படுவதில் கட்டாயம் தலையிடு கின்றது என்று கருதுகின்றனர் . இது தவறு. இங்ஙனம் அலிகள் உண்டாயினும் அவர்கள் ஏனைய ஆடவர்களைப்போலவே பாலுறவுகளை வைத்துக்கொள்ளலம். ஆடவர்களிடமும மகளிரிடமும் பால் தூண்டலை விளைவிப்பதும் பாலுறவுகளைச் செயற்படச் செய்வதும் பால் சுரப்பிகளினால்மட்டிலும் நேரிடுவதன்று ; அவை வேறு ஹார்மோனின் செயலால், குறிப்பாக நரம்புத் தூண்டலாலும் மனத் தூண்டலாலும், நேரிடுகின்றன.

மலட்டுத் தன்மை மரபு வழியாக இறங்குகின்றது என்பதை முதன்முதலில் கேட்டதும் சிலருககு நம்பிக்கை உண்டாவதில்லை. அஃது எங்ஙனம் நிகழ்கின்றது ? பின் தங்கும் ஜீன்கள் ஒன்றாகச் சேர்ந்து இனப் பெருக்கத்தைத் தடுக்கும் அளவிற்குப் பாலுறுப்புக் குறைகளையோ அல்லது அவை செயற்படுவதில் குறைகளையோ உண்டாக்குகின்றன. இத்துடன் முன்னர்க் குறிப்பிட்ட சில குறை களும் சேர்ந்து பல்வேறு முறைகளில் இனப் பெருக்கத்தைத் தடுக்