பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 வாழையடி வாழை

கின்றன : அல்லது நடைபெறாமல் கட்டுப்படுத்துகின்றன. சில வகை முட்டாள் தன்மை” அல்லது பேதைத் தன்மை, சிலவகைக் குள்ளமை, ஒருவகைத் தசை கசித்தல் போன்றவை இவற்றுள் சில. மரபுவழியாக இறங்கும் குறைகளால் பாலுறுப்புகள் செயற்படுவதி லுள்ள சங்கடங்களும் முழு மலடு அல்லது அரை குறையான மலடுக் குக் காரணமாகின்றன. ஆடவர்களிடம் சிறுநீர்ப் புறவழியின் திறப்பு ஆணுறுப்பின் அடிப்பக்கததில் தவறுபட இருப்பதால் (Hypospadias) விந்து பாய்தல் தடைப்படுகின்றது. அரை குறையாக ஓங்கி கிற்கும் ஜீன்களால் ஏற்படுவதாக நம்பப்பெறும் இக் குறை அறுவை சிகிசசை அல்லது வேறு சிகிச்சையால் போக்கப்பெறலாம். விங் தணுக்களின் மரபுவழியாக இறங்கும் சில இயல்பிகந்த தன்மை களும் மலட்டுத் தன்மைக்குக் காரணமாகலாம். ம க ளி ரி ட ம் பாலுறுப்புகள் அல்லது அவை செயற்படுவதுபற்றிய பல்வேறு இயல்பிகந்த தன்மைகள்’ இனப்பெருக்கத்திற்குத் தடையாக வுள்ளன. இவை யாவும் மரபுவழிக் கூறுகள் என ஐயுறப்பெறினும், அதற்குத் தக்க சான்றுகள் இன்னும் கண்டறியப் பெறவில்லை.

பாலுறுப்புகள் செயற்படுவதில் தொடர்புகொள்ளாத சில விநோத இயல்புகள் உள்ளன. ஆண்களிடம் அதிக உரோமம் காணல், மகளிரிடம் வழக்கத்திற்குமீறிய கொங்கை வடிவங்கள் தென்படல் இவற்றுட்சில. இவையற்றிய ஆராய்ச்சி இன்னும் மேற்கொள்ளப் பெறவில்லை. பல்வேறு வகைக் கொங்கைகள் சில மரபுக்குழுக் களைத் தனிச்சிறப்பாக எடுத்துக்காட்டுவது போலவே, மகளிரிடம் மிகப்பெரிய கொங்கைகள் அல்லது மிகச் சிறிய கொங்கைகள் பல தலைமுறையாகத் தொடர்ந்து ஒரே குடும்பத்தில் காணப்பெறலாம். இருபாலாரிடம் தேவையான எண்ணிக்கைக்கு மேற்பட்ட முலைக் காம்புகளும் மரபுவழிக் கூறுகள் என்று நம்பபபெறுகின்றன. சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு முலைக்காமபுகள் தாம் அதிக மாக இருப்பது வழக்கம்; ஆனால் சிலர் நான்கு அல்லது ஐந்து ணைகளைப் பெற்றுள்ளனர்; இவை வழக்கமாக இருப்பவைகட்கு

15. முட்டாள் தன்மை - idiosy. 16. GL&pg. # 3563roun - Imbecility, 16. Agenitalism, Infantilism, Eumucholdism. etc.