பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வாழயைடி வாழை

இவற்றையெல்லாம் சேர்த்து வைத்து நோக்கினால் பழங்காலத் தில் எல்லா Rh'-குழவிகளிலும் சுமார் 40 சதவிகிதம் குழந்தை கள் எரித்ரோ பிளாஸ்டாஸிஸ் நோயுடன் பிறந்து குறுகிய காலத்திற் குள் இறந்தன என்பது தெரிகின்றது. ஆயினும், கருவுலக வாழ் விலேயே எத்தனைக குழவிகள் மரித்திருக்க வேண்டும் என்பதுபற்றி ஒருவரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. எனினும் ஜே. பி. எஸ். ஹால்டைன் என்பார் 1944இல் இதுகாறும் அறிந்த வேறு எந்த ஜீன் வேறுபாடுகளினால் ஏற்பட்டதைவிட இந்த Rh ஜீன் வேறுபாடு களினால்தான் அதிகமான மனித இறப்புகள் ஏற்பட்டிருக்க வேண் டும் என்று ஒருவாறு மதிப்பிட்டுள்ளார்.

ஆனால் Rh நிலை எவ்வாறிருப்பினும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான குழவிகள் மிகவும் வியக்கத்தக்க இரு-வழி’க் குருதிப் பரிமாற்றச் செயலால் காக்கப்பெறுகின்றன. இதில் ஒரே சமயத்தில் குழந்தையின் குறைபாடுள்ள குருதி வடிக்கப்பெற்று நல்ல புதிய குருதி ஏற்றப்பெறுகின்றது. Rh நோயால் இறப்பவர்களின் தொகையைக் குறைக்கவேண்டுமானால் இந்த முறையில் கம்பிக்கை வைத்து எச்சரிக்கையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.

Rh - நெகட்டிவ்’ குருதியையுடைய எந்த இளம் பெண் னுக்கும் “பாலிட்டிவ்’ குருதியைப் புகுத்தவேகூடாது. இஃது ஆண்களுக்கும் பொருந்தும. குழந்தைப்பேறு ஏற்படுவதற்கும் எல்லாத் தம்பதிகளின் குருதியும் சோதிக்கப்பெற்று அவர்களிட முள்ள Rh வகைகளை அறிநதுகொள்ளுதல் வேண்டும். கணவனின் குருதி பாஸிட்டிவ்'வாகவும். மனைவியின் குருதி நெகட்டிவ்’ வாகவும் இருப்பின். எப்பொழுதாவது மனைவி குருதிபுகுத்தப் பெற்றனளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்; மேலும் சோதனைகள் செய்து அவளிடம் ‘ Rh எதிர்ப்பொருள்கள்’ உள்ள னவா என்பதை அறுதியிடல் வேண்டும். மேலும், கணவரிடம் அவர், அவருடைய குடும்பத்திலுள்ளவர்களுள் முனைதாக ஏதாவது மக்கட்பேறு ஏற்பட்டிருந்தால் அவர்களுள் - இவர்களிடம் Rh’ குருதிச் சோதனைகள் செய்தால், அச சோதனைகள் அந்த