உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி வகைகள் 243

ங்ணம் தாக்கும் அளவும் முன்னர்ப் பெற்றெடுத்த குழவிகளைத் தாக்கின அளவுகளைவிட அதிகமாகவும் இருக்கும். இந்த அளவு கருக்குழந்தையைக் கொல்லுவதற்கும் போதுமானது. அல்லது அவள் குழந்தையைக் கருவுயிர்த்துவிட்டாலும், அக் குழந்தையின் குருதி மிகக் கடுமையாகச் சீரழிந்துதான் இருக்கும். இன்று மருத்து வர்கள் ஒரு Rh’ கருப்பத்தின் ஒவ்வொரு நிலையிலும் சோதனை களால் எவ்வளவு எதிர்ப்பொருள் தாயினால் உற்பத்தி செய்யப் பெறுகின்றது என்றும், எங் நிலையில் விபத்து வரக்கூடும் என்றும் முன்னரே அறிந்து சொல்லக்கூடிய நிலையிலுள்ளனர்.

ஆனால், மேற்கூறிய நிலையைவிடக் கேடு பயக்கக்கூடிய வேறொரு நிலை உள்ளது. ஒரு Rh-நெகட்டிவ்” தாய் பிள்ளைப் பேறு ஏற்படுவதற்கு முன்னர் ‘ Rh-பாஸிட்டிவ்’ குருதி உடலில் புகுத்தப்பெற்றதால் விளையும் கேடு அது. ‘Rh'-கூறு கண்டறியப் பெறாததற்கு முன்னர் ஒரு Rh-நெகட்டிவ்’ தாய்க்குக் குருதி புகட்டபபெறும் கிலை நேரிட்டால், அந் நிலையில் குருதி Rhபாஸிட்டிவ்'வாக இருக்கும் வாய்ப்புகள் ஒன்றுக்கு ஏழாக இருந்தது. காரணம், குருதிக் கொடையாளர்களிடம் ‘நெகட்டிவ்’ வகைக் குருதியுடன் ஒப்பிட்டால் ‘பாஸிட்டிவ்’ வகைக் குருதி அதிகமாக இருந்தது. இத்தகைய நிகழ்ச்சியில் ஒரு பெண் ஒரு Rh-பாஸிட் டிவ்’ குழந்தை பெறுவதால் அவளுடைய உடலில் எதிர்ப்பொருள் கள் உண்டாவதைவிடப் பத்துமடங்கு அடிக்கடி அப் பொருள்கள் அவள் உடலில் ஏற்படுதல் கூடும்; இந்த எதிர்ப்பொருள்கள் அவ ளுடைய உடலில் பல்லாண்டுகள் நீடித்துத் தங்கியிருத்தல் கூடும். எனவே, அவளது முதல் ‘Rh'-கருபபத்திலேயே அவளுடைய உடலில் எதிர்ப்பொருள்கள் இருந்து குழந்தையைத் தாக்குதல் கூடும். டாக்டர் லெவின் நெகட்டிவ்” தாய்மார்களின் குழு ஒன்றில் நடத்திய ஆராய்ச்சியால் ‘பாஸிட்டிவ்’ குருதியை ஏற்ற வர்கட்குப் பிறந்த முதல் Rh'’ குழந்தைகளில் 16க்குப் 10 குழந்தை கள் இறந்தன என்றும், ‘நெகட்டிவ்’ குருதியை ஏற்றவர்கட்கு முதலாவதாகப் பிறந்த Rh- பாஸிட்டிவ்’ குழவிகளில் 9க்கு 1 இறந்தது என்றும் அறிகின்றோம். இந்தப் புள்ளி விவரங்கள் “Rh-நெகட்டிவ்” தாய்மார்கள் Rh-பாஸிட்டிவ்’ குருதியை ஏற்ற தால் ஏற்பட்ட கேட்டினை கன்கு விளக்குகின்றன.