உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 வாழையடி வாழை

ஆனால் தாய் ‘ Rh-நெகட்டிவ்” வாகவும் சேய் Rh-பாஸிட்டிஷ்’ வாகவும் உள்ளவர்களில் சுமார் பதினாறு பேருக்கு ஒருவரிடம் இங்கனம் அமைகின்றது; அல்லது முன் எச்சரிககையாகத் தடுக்கும் முறைகள் கண்டறியப்பெறுவதற்கு முன் இங்ஙனம் அமைந்தது அஃதாவது, பன்னிரண்டு கருப்பங்களில் தாய் ‘நெகட்டிவ்'வாகவும் சேய் ‘பாஸிட்டிவ்'வாகவும் அமையும்; ஆயினும், கருவுயிர்க்கப்பெற்ற குழவிகளில் 150-200க்கு ஒன்றினிடமே Rh'-நோய் (எரித்ரோ பிளாஸ்டாஸிஸ்) காணப்பெற்றது. இவ்வளவு குறைவாக இருப்ப தற்குக் காரணம் என்ன ?

தாய்க்கும் சேய்க்கும் இடையில் பகையாக எதிர்த்து கிற்கும் குருதிப்பொருள்கள் உண்டாவதும் பரிமாற்றம் நடைபெறுவதும் எப் பொழுதுமே ஏற்படுவதில்லை. ‘ Rh'’ பொருள்வகைகளிலும் எதிர்ப பொருள் வகைகளிலும் வேறுபாடுகள் உள்ளன. சில பிறவற்றை விட வலுக்குறைவாக உள்ளன. இதனால் அவை கிளர்ச்சி செய் வதுமில்லை; பகையாக உள்ளவற்றிடம் முரண் கொண்டு எதிர்பபது மில்லை. ஆனால் முக்கியமாக அறிய வேண்டுவது இது : கருக் குழந்தையை எதிாக்கும் அளவும், வளர்ச்சியின் ஒரு நிலையில் இத்தகைய எதிர்ப்பு நடைபெறுவதும் பெரும்பாலும் தாய் முனைச் ‘Rh”-குழவி களைப் பெற்றதாலும் அல்லது அவள் ஒரு தடவை அல்லது பல தடவை ‘Rh-பாஸிட்டிவ்” குருதி அவளிடம புகுத்தப்பெற்றதாலும் அடைந்த அவளுடைய முன்னநுபவத்தைப் பொறுத்தவையாகும்.

இதை மேலும் சிறிது விளக்குவோம். ‘Rh-நெகட்டிவ்’ தாயொருத்தி ஒரு ‘Rh-பாஸிட்டிவ்’ குழந்தையைப் பெறுவதாக வும். அவளிடம் குருதிப்பொருள்கள் பரிமாற்றம் நேரிடுவதாகவும் கருதுவோம். இப்பொழுது அவளிடம் உற்பத்தியாகும் எதிர்ப் பொருள்கள் கருக்குழந்தையைத் தீங்கு செய்யும் அளவிற்கு வன்மை யுடைனவாக இருபபதில்லை. ஆனால், அந்தத் தாய் தன்னுடைய இரண்டாவது அல்லது அடுத்த ஒரு ‘பாஸிட்டிவ் குழவியைப் பெறுவதாகக் கருதுவோம். இப்பொழுது அவளிடம் ஏற்கெனவே உண்டான கருப்பங்களின் பொழுது உற்பத்தியான தாக்கும் எதிர்ப் பொருள்கள் இப்பொழுது உண்டான கருக்குழந்தையின் குருதி யணுக்களைத் தொடக்க நிலையிலேயே தாக்கத் தொடங்கும்; இங்