உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது நெடுநாள் வாழ்வு 263

விட்டதால் அவர் தம்முடைய கொளகையைச் சோதனைகளால் கிலைநாட்ட முடியாதுபோயிற்று. ஆயினும் அவ்வாராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்ட அமெரிக்க அறிவியலறிஞர்கள் அந்தச் சீரத்தால் யாதொரு பயனும் இல்லை என்று கண்டனர். நம்முடைய நாட்டிலும் ‘காயகல்ப்பம்’ என்ற முறையால் ஆயுளை நீட்டித்து இளமை திரும்பச் செய்யலாம் என்ற செய்தியை இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம்.

உணவு முறையைக்கொண்டு வாழ்நாளை நீட்டிக்கலாம் என்றும் கூறுகின்றனர். உணவிலுள்ள நியூக்லிக் அமிலம் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கினறது என்பது அவர்களது நம்பிக்கை. மேலும் அவர்கள் இச் சோதனையைச் சுண்டெலிகளிடம் மேற்கொண்டு மீதுணினைக் கொண்ட சுண்டெலிகள் விரைவில் மரிக்கின்றன எனறும், உணவினைக் குறைத்து உண்பவை சற்று அதிகநாள் வாழ்கின்றன என்றும், புலாலுண்பவை மரக்கறி உணவை உண்ணும் சுண்டெலிகளை விடக் குறிபபிடத்தக்க அளவில் அதிக நாள்கள் வாழ்கினறன என்றும் தமது கொள்கையினை நிலைநாட்டுகின்றனர்.

நவீன ஆய்வுகளால் நுண்ணிய குருதிக்குழல்கள் இதயம், சிறுநீரகங்கள். பிற உறுப்புகளைச் சீர்கேடடையச செய்யும் நோய் களைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் முறைகள் கண்டறியப்பெற்று வருவதால் இத் துறையில் கமது நம்பிககை வளர்நது வருகின்றது. அங்ஙனமே, சூழ்நிலையில் நேரிடும் விபத்துகளையும் குறைப்பதற்கு வழிகள் கண்டறியப்பெற்றால் மரபுவழியாகப் பெற்ற ஆயுட்காலம் தானாகச் சற்று நீளும் என்பதற்கு யாதொரு ஐயமும் இல்லை. இன்றும் இத துறையில் மேனாடுகளில் பல விநோதமான கொள்கைகள் தோன்றியவண்ணமுள்ளன.