உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சம் நில்லுங்கள்!

“கொஞ்சம் நில்லுங்கள்!'-இயல் 1 இல் பார்வதியின் குழந்தையைக் குறிப்பிட்டோம். பிறந்த குழந்தையைப்பற்றி உறவினர்களிடையே நடைபெறும் பேச்சினைக் கண்டோம். பரந்தாமனைப்பற்றிப் பேசினோம்-திருஷ்டி பரிகாரத்திற்குப் பிறந்த குழந்தை என்றோம். கோடிவீட்டுக் குப்புசாமி வீட்டு வேலைக் காரியின் மகள் திருமகளே அவதாரம் எடுத்ததுபோல் மூக்கும் முழியுமாக இருப்பதை எடுத்துக்காட்டினோம். மற்றும் காங்கேயம் காளை, பங்கனபல்லி மாம்பழம், மரபுவழியாக இறங்கும் பண்புகள், குறைபாடுகள் போன்றவற்றையெல்லாம் குறிப்பிட்டோம். இன்னோ ரன்ன செய்திகட்குக் காரணங்கள் எவை? என்ற வினாவை எழுப்பி னோம். இவற்றையெல்லாம் ஈண்டு நினைவுகூர்ந்து சிந்திக்க வேண்டும். இதுகாறும் இந்தச் சிறுநூலில் எடுத்துக்காட்டின கால் வழி இயல்பற்றிய குறிப்புகள் நம் சிந்தனைக்குத் துணையாக அமையும்.

உலக வரலாற்றில் எல்லாக் கூறுகளிலும் மிகச்சரியாக நம்மை யொத்த மற்றொருவரைக் காண்டல் அரிது; இன்னும் வருங் காலத்தில் காலவெள்ளத்தில் கம்மைப்போலவே மற்றொருவர் பிறத்தலும் அரிது. நம்மையே சோதித்துப் பார்த்தால் எந்தெந்த மரபுக்கூறுகள் குடிவழியாக இறங்கின? எவை எவை இங்ஙனம் இறங்கவில்லை? என்பன போன்றவற்றிற்குக் காரணங்கள் ஒருவாறு புலனாகும். இந்த அறிவியல் அறிவை உறுதுணையாகக் கொண்டு நம்மையே நாம் சோதிககலாம். நம்முடைய மரபுவழி வருவோரைப் பற்றியும் ஆராய்ந்து தெளியலாம்.