உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 74. வாழையடி வாழை

யாற்றும் முன்னிலையில் திகழும் இந்திய அறிவியலறிஞர்கள் கலந்துகொண்டமையுமாகும் இவர்கள் கால்வழி இயலில் கண்டறிந்த அறிவுக் கருவூலம் கோடிட்டுக் காட்டக்கூடியதாக அமைங் திருந்தது.

அணுத்திரளை உயிரியல் : இப் பகுதி பெரும்பாலோரின் கவனத் தைக் கவர்கதது. பல்லுழிக் காலமாக எத்தனையோ விதத் தாவர வகைகள் காலமாற்றததையும், காலமாற்றத்தின் புரட்சியையும், மழையின்மையையும, வெயிலின் கொடுமையையும் தாங்கிக் கொண்டு தப்பிய பிழைத்துள்ளன. இங்ஙனம் தாக்குப் பிடித்துவந்த தாவர வகைகளின இடத்தை அதிக பயன் விளையும் தாவர வகைகள் பிடித்துக்கொண்டன. பேராசிரியர் ஃபிராங்கெல் என்பார் இவ்வகைத் தாவர ஜீன்களைப் பாதுகாக்கவேண்டும் என்று அறிவுரை கூறி இவ்வகைகளை அழியவிடக் கூடாது என்றும் எச்சரித்தார். இவற்றைப் பாதுகாப்பதுடன் இவற்றோடு தொடர்புள்ள ஒவ்வொரு பயிர் வகைகளையும் (Crop varieties) பாதுகாக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கடந்த முப்பது நாற்பது ஆண்டுக் காலத்தில் கோதுமை, நெல், கரும்பு முதலியவற்றின் மேம்பாட்டில் மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இவை யெல்லாம் கலப்பினத்தின் (Hybrid) திருவிளையாடல் என்பதைக் கோடிட்டுக் காடடினார். இத் துறைபற்றிய பல நுணுக்கமான உடன் பயன்படக்கூடிய கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஜெனிடிக் பொறியியல்: அண்மையில் கண்டறியப்பெற்ற ஓர் அற்புத பொறியியல் நுணுக்கத்துறை. இதனால் பல்வேறு வகைப் பட்ட ஜீன்களைப் புதிதாகப் படைக்க முடிகின்றது. அணுத்திரளை உயிரியலின் பெருங் கொடையைப்பற்றி அழுத்தம் கொடுத்துப் பேசினர் இரண்டு ஆஸ்திரேலிய கால்வழி இயல்விற்பன்னர்கள். தாவர, விலங்கு, மானிட பாக்டீரிய - உயிர்ப்பொருளின் அமைப்பு பற்றிப் பேராசிரியர் சி. இ. ஸ்கல்கிராஃப் என்பார் தெளிவாக எடுத் துரைத்தார். ஒரு வகையான தாவர இனத்தின் உயிரணுப்பாட்டு முறைகளில் (இம் முறைகள் ஜெனிடிக் பொறியியல் பகுதியைச் சார்ந்தவை) பல்வேறுவகை ஜீன்களைப் பேரளவில் விளைவிக்கலாம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டினார். சாதாரண மக்கள்