உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 3

வாழ்வின் தொடக்கம்

நமது உடலிலுள்ள உயிரணுக்கள் யாவும் கருவுற்ற ஒரு முட்டையிலிருந்து பிரிந்து உண்டானவை என்று முன்னர்க் குறிப் பிட்டோமல்லவா? இந்தக் கருவுற்ற முட்டையணு எங்கிருந்து எப்படி உண்டாயிற்று என்பதைக் காண்போம்,

ஆணும் பெண்ணும் மருவுதலால் மானிடக்கரு உண்டாகின்றது என்பதை நாம் அறிவோம். ஆணிடத்து உண்டாகும் விந்தணுவும்: பெண்ணிடத்து உண்டாகும் முட்டையணுவும் சேர்ந்தே இக் கரு உண்டாகின்றது. விந்தணு பருவமடைந்த ஆணிடத்து உண்டாவது: அங்ஙனமே முட்டையணு பருவமடைந்த பெண்ணிடத்து உண்டாவது. ஒரு சிறு துளி விந்துவில் இலட்சக்கணக்கான விந்தணுக்கள் இருக்கும். ஆனால் முட்டை சாதாரணமாக ஒரு மாதத்திற்கு ஒன்றுதான் வெளிப்படுகின்றது. கலவிக்குப் பிறகு விந்தணுக்கள் யோனி, கருப்பை இவை வழியாகக் கருக்குழலை நோக்கி நீந்திச் செல்லும்பொழுது கருப்பையை நோக்கி வந்துகொண்டிருக்கும் முதிர்ச்சியுற்ற முட்டையைச் சந்திக்கும். யாதாவது ஒரு விந்தணு முட்டையைத் துளைத்துச் சென்று அதனைக் கருவுறச் செய்யும். இதனைப் படத்தில் காண்க (படம்-3). இதுவே கருவுற்ற முட்டை” ஆகும்.

வழிவழியாக வரும் மரபுத் தன்மை மிகவும் நுட்பமாகவுள்ள விந்தணு, முட்டை ஆகியவற்றின் மூலமாகவே அமைதல் வேண்டும்.

1. 67 fighggy - Sperm cell. 2. (vgl -60) Lu 1gg) – Egg cell. 8. 35gsfp (yl sol- - Fertilised ovum