உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணு 9

கொண்டதாகக் காணப்பெறும். எடுத்துக்காட்டாக இழையங் களிலுள்ள உயிரணுக்கள் உழைப்பினாலும் இறுக்கத்தினாலும் அமுககத்தினாலும் தாக்கப்பெறுவதால் அவை கோள வடிவின வாகவும், உருளை வடிவானவாகவும், தட்டையாகவும், நூற்கும் கதிர் வடிவினவாகவும்’ இருக்கும். பெரும்பாலான நரம்பு அணுக்கள் நீளமான நுண்ணிய கிளைகளைக் கொண்டும். இக் கிளைகள் மிக நீளமாகவும் இருக்கும். உயிரணுக்கள் பல்கிப் பெருகுங்கால் சில தசையணுக்களாகின்றன; சில எலும்பு அணுக் களாகின்றன. சில குருதி, நரம்பு அணுக்களாகின்றன. சில உயி ரணுக்கள் உயிர்களின் இனப்பெருக்கத்திற்கெனவே ஒதுக்கப்பெறு கின்றன. இறுதியாகக் குறிப்பிடப்பெற்ற உயிரணுக்களே கமது மரபுவழி அற்றுப்போகாமல் காககின்றன. இவற்றின் தன்மைகளைப் பின்னர் விளக்குவோம்.

1 2. -- - Tissue. 18. gT#)(3th &#if - Spinle.