உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வாழையடி வாழை

புரோடாபிளாஸம் எல்லாம் சைட்டோபிளாஸம் என்று வழங்கப் பெறும். இப் பகுதியில் கரிம உப்புக்கள், நிறமிகள் எண்ணெய்த் துளிகள். நீர், இன்னும் இவை போன்ற பல உயிரற்ற பொருள்கள் உள்ளன. இப் பொருள்கள் படத்தில் காட்டப்பெறவில்லை. தொடக்க நிலையிலுள்ள உயிரணுக்கள் சாதாரணமாகக் கோள வடிவினையுடையவை.

நமது உடலில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன. இவை யாவும் ஆதியில் தோன்றிய ஒற்றை உயிரணுவிலிருந்து பெருகினவையே. இந்த உயிரணுக்கள் நமது குருதி வழியாகத் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற்று வளர்கின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சியுற்றதும் இவை தம் உட்கரு உட்பட இரண்டாகப் பிளவுபடுகின்றன. உயிரணு பிளவுபடும் முறையைப் படம் (படம்-2) விளக்குகின்றது. உட்கருவில் ஏற்படும் பல மாற்றங்கள் இவண் விளக்கப்பெறவில்லை ; இவை பின்னர்

படம்-2. உயிரணு பிளவுபடும் முறையை விளக்குவது

1. சைட்டோ பிளாஸம்; 2. உட்கரு

விளக்கப்பெறும். ஒவ்வோர் உயிரணுவும் தனது இனத்திற்குத் தக்க படியும் உறுப்பின் செயலுக்குத் தக்கபடியும் அமைப்பில் வேற்றுமை

10. fun n_L#36ir - Organic sal’s. 1 1 . figyt – Pigment.