உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வாழையடி வாழை

விந்தணுவின் தலை தன்னுடைய நிறக் கோல்களை அவிழ்க்கும் பொழுதே முட்டையின் உட்கருவும் உடைபட்டுத தன்னிடமுள்ள 23 நிறக் கோல்களை விடுவிக்கின்றது.” இந்த நிலையைப் படம் (படம்-5) விளக்குகின்றது. இதுவே கருவுறுதல் என்பது. எனவே,


படம்-5. கருவுறுதலை விளக்குவது.

A -யில் விந்தணுவின் தலை முட்டையில் நுழைகின்றது. B-யில் விந்தணுவின் தலையும் முட்டையின் உட்கருவும் தத்தம்

நிறக் கோல்களை விடுவிக்கின்றன.

நம்முடைய வாழ்வு 46 நிறக் கோல்களைக் கொண்டு தொடங்கு கின்றது என்பதை நாம் அறிகின்றோம். உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் இந்த 46 கிறக் கோல்களும் 23 இணைகளாக அமைந்து கிடக்கும். வடிவம், பருமன், அமைப்பு முதலியவற்றில் வேறுபாடுகளையுடைய இந்த 23 இணைகளிலுமுள்ள கிறக் கோல் களில் ஒன்று விந்தணுவிலிருந்து வந்தது மற்றொன்று கருவுறு வதற்கு முன் முட்டையிலேயே இருந்தது. எனவே, ஒரு குழந்தை

8. டாக்டர் டி. சி. சு. Dr T C Hs1 என்பார் அண்மைக்கால ஆய்வுகளால் மனிதனிடம் 23 இணை நிறக் கோல்களே உள்ளன என்று உறுதியாக நிலைநாட்டப்பெற்றுள்ளதாகக் கூறுகின்றார். (David-C. Rife : Heredity and Human Nature—Lth 21 g|so காண்க).