உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 4

உயிரணுப் பிரிவு

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை 46 நிறக் கோல் களைக் கொண்ட ஒரு கருவுற்ற முட்டையினின்று தொடங்குகின் றோம் என்பதை மேலே கண்டோம். இந்த உயிரணு எண்ணற்ற தடவைகளில் பல்கிப் பெருகித்தான் முற்றிலும் வளர்ந்த மனித னாகின்றது. இந்த உயிரணு எவ்வாறு பல்கிப் பெருகுகின்றது என்பதை இனி விளக்குவோம்.

உயிரணு பிளவுறுங்கால் உட்கருவில் ஏற்படும் மாற்றங்களைப் பின்னர் விளக்குவதாகக் குறிப்பிட்டோம் அல்லவா ? கருவுற்ற முட்டையைக் கொண்டு இம் மாற்றங்களை விளக்குவோம். இம் மாற்றங்களை விளக்கும் பல நிலைகள் படத்தில் (படம்-7) காட்டய பெற்றுள்ளன. எளிதாக விளங்கும் பொருட்டு நான்கு கிறக கோல்களே (இரண்டு இணைகளே) படத்தில் காட்டப்பெற்றுள்ளன. முதல் நிலையில் விந்தணு முட்டையினுள் புகுகின்றது. இரண்டாம் நிலை விந்தணு வாலை இழப்பதைக் குறிக்கின்றது. மூன்றாம் நிலை விந்தணுவின் சென்ட்ரோஸோம இரண்டாகப் பிளவுறுதலைக் காட்டுகின்றது. நான்காம் நிலையில் விந்தணுவின் உட்கரு முட்டை யின் உட்கருவினை நெருங்குகின்றது. ஐந்தாம் நிலையில் விந்தணு வின் உட்கரு பெரிதாவதைக் குறிக்கின்றது. ஆறாம் நிலை குரோமேட்டின் என்ற பொருளிலிருந்து நிறக் கோல்கள் உண்டா கின்றன என்பதைக் குறிக்கின்றது. ஏழாம் நிலையில் நிறக் கோல்கள் நீளத்தை அச்சாகக் கொண்டு இரண்டாகப் பிளவுறு தலைக் குறிப்பிடுகின்றது. எட்டாம் நிலையில் பிளவுற்ற நிறக் கோல்கள் துருவ நிலைகளிலுள்ள சென்ட்ரோஸோம் பகுதிகளால் பற்றப்பெற்ற நிலையில் உள்ளன. ஒன்பதாம் நிலையில் கருவுற்ற