பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறான நம்பிக்கைகள் 39

என்பது இதற்கு ஒரு விளக்கமும் தரலாம். சிலசமயம் கணவனும் மனைவியும் இதனால் சகோதர சகோதரிபோல் காணப்பெறலாம்: பெற்றோர்களைப்போலவே பிள்ளைகள் காணப்பெறும் தன்மை இதல்ை அதிகரிக்கலாம். இங்ஙனம் கலவியைப்பற்றிய தவறான கம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் சேர்ந்து ஒரு தனிப்பெரு நூலாகவே அமையலாம்.

ஒருவருடைய கிறக்கோல்களும் மற்றொருவருடைய கிறக் கோல்களும் பொருந்தாமல் அவற்றிடையே முரண்’ ஏற்பட்டுக் குழவிகளே பிறக்காமல் போகும் நிலையும் ஏற்படுமா என்ற வினா இவ்விடத்தில் எழுகின்றது. ஆம்: உண்மைதான். ஒருசிலரிடம் இங்கிலை ஏற்படலாம். ஆனால், நிறத்தாலும், குழுவாலும். “வகையாலும்’ வேறுபடும் மனிதர்களிடையே இங்கிலை தோன்றும் என்று சொல்வதற்கில்லை. இஃது ஒரு முக்கிய வேறுபாடு என்பது ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. சிலசமயம் இருவரிடம் உள்ள ஏதாவது ஒரு குறிப்பிடட ‘அபாயகரமான’ ஜீன்கள் அல்லது பிற கூறுகள் ஒனறு சேருங்கால் அவர்களுக்குப் பிறக்கும் குழவிகட்கு வெருட்சியை விளைவிக்கலாம் என்பதைப் பின்னர் விளக்குவோம்.

வெவ்வேறு இனத்தைச் சார்ந்த இருபிராணிகளிடையே நிறக்கோல்கள் பொருந்தா நிலை ஏற்படுகின்றது. என்பது உயிரியல் காட்டும் உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு பூனையும் நாயும் கலவிபுரிந்து குட்டிகளை ஈனமுடியாது. (படம் - 1 1): இங்ஙனமே வாத்தும் கோழியும் கலவிபுரிந்து இனப்பெருக்கம் செய்தல் முடியாது. ஆயினும், ஒரு குதிரையும் கழுதையும் கலவி புரிந்து கோவேறு கழுதையை” உண்டாக்கலாம். (படம்-12) ஆனால், கோவேறு கழுதையிடம இனப்பெருக்கத்திற்குக் காரணமான பாலணுக்கள் உண்டாவதில்லை; முரண்பாடுள்ள கிறக்கோல்களே இதற்குக் காரணமாகும். ஆனால், சில அரிய சந்தர்ப்பங்களில், பல சிக்கலான காரணங்களால், பெண் கோவேறுகழுதைகள் கருத்தரிக்கும்

8. 60rth - Species. 4. 5(1950) 35 - Donkey, 5. கோவேறுகழுதை - Mule.