உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பிறப்பு 53

ஆகவே, பிரிதல் நிகழ்ந்தபிறகு ஓர் உயிரணுவில் தாய் வழியாக வந்த 20 நிறக் கோல்களும் தந்தை வழியாக வந்த 3 நிறக் கோல் களும் அமைந்து 23 கிறக் கோல்களாகலாம் ; அல்லது தாய் வழியாக வந்த 8 கிறக் கோல்களும் தந்தை வழியாக வந்த 15 நிறக் கோல்களுமாக அமைந்து 23 கிறக் கோல்களாகலாம். ஒரு குறிப் பிட்ட பெற்றோர் தம்முடைய முடடையணுக்கள் அல்லது விந்தணுக் களில் எத்தனை வெவ்வேறு விதமான நிறக் கோல் சேர்க்கையினை விளைவித்தல் கூடும் என்பதைக் கணிதம் மூலம் அறுதியிட்டு விடலாம்

குறைத்துப் பகுத்தலை விளக்கும்போது எட்டு கிறக் கோல் களைக் கொண்ட உயிரணு பிரிவதைக் காட்டினோம். அங்கு அவை எத்தனை விதமாகப் பிரிந்து அமையலாம் என்பதை ஈண்டுக் காட்டுவோம். தாய்வழியாக வந்த நிறக் கோல்கள் (வெண்ணிற மாகக் காட்டப்பெற்றுள்ளவை) நான்கும் உயிரணுவின் ஒரு துருவத் திற்கும். தங்தை வழியாக வந்தவை (கருமை நிறமாகக் காட்டப் பெற்றுள்ளவை) மற்றொரு துருவத்திற்குமாக நகரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறு பிரியும்போது இருவகை இணை கிறக் கோல்களில் ஒரு வெண்மை அல்லது கருமை கிறக் கோல் தம்முடைய தோழர்களை விட்டு எந்தத் துருவங்களை அடைகின்றன என்பதைத் “தற் செயலே’ அறுதியிடுகினறது. நடுநிலைப் பரப்பில் இருக்கும் கிறக் கோல்கள் தமக்கு மிக அருகிலுள்ள துருவத்தையே அடையும். எல்லாக் கரு கிறக் கோல்கள் ஒரு துருவத்திற்கும் எல்லா வெண்ணிறக் கோல்கள் மற்றொரு துருவத்திற்குமாக நகர்வது ஒருவகை : அல்லது. தற்செயலாக, 3 கருநிறக் கோல் களும் 1 வெண்ணிறக் கோலும் ஒரு துருவத்திற்கும் 3 வெண்ணிறக் கோல்களும், 1 கருநிறக் கோலும் மற்றொரு துருவத்திற்குமாக நகர் வது மற்றொரு வகை. இவ்வாறு எல்லா வகைகளையும் சிந்திக்கலாம். வெண்ணிறக் கோல்கள் மேலும் கரு நிறக் கோல்கள் கீழுமாகவும். அல்லது கரு நிறக கோல்கள் கீழும் வெண்ணிறக் கோல்கள் மேலு மாகவும் இருவகையொழுங்கில் அமையக்கூடுமாதலாலும் இந்த நான்கு இணைகளும் வெவ்வேறு விதமாக எட்டு வகையாக அமைதல் கூடும். இவை 16 விதமான சேர்க்கைகளைத் தருகின்றன.