உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வாழையடி வாழை

களிலும் எது முட்டையை அடைகின்றது என்பதைத் திட்டமாகக் கூறமுடியாது. அது தற்செயலாக நடைபெறும் சேர்க்கையே ஒற்றையா. இரட்டையா என்று பார்க்கும் முறையை யொத்ததே. அன்றியும், முட்டை கருவுறும்பொழுதே பிறக்கும் குழந்தையின் பால் அறுதியிடப்பெறுகினறது. அதனை ஆணாகவோ பெண் ணாகவோ மாற்றும் ஆற்றல் கம்மிடம் இல்லை என்பது அறியத் தக்கது. எனவே, மேலே குறிப்பிட்ட அரண்மனை அந்தப்புரத்தின் ஏற்பாடுகள் யாவும் வீணே என்பதும் உணரத்தக்கது.

இனி X, Y கிறக்கோல்கள் எவ்வாறு பால் வேற்றுமைகளை விளைவிக்கின்றன என்பதை விளக்குவோம். ஒவ்வொரு கிறக்கோலிலும் ஜீன்கள்’ உள்ளன என்பதும், அவைகளே பெற்றோருடைய குடிவழிக் கூறுகளை வழிவழியாகக் கொண்டு செலுத்துகின்றன என்பதும் ஈண்டு அறியத்தக்கவை. ஒத்துள்ள நிறக் கோல்களில் உள்ள ஜீன்'களின் அமைபபு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் X நிறக்கோலில் அதிகமான ஜீன்களும் Y கிறககோலில் குறைவான ஜீன்'களும் உள்ளன. இந்த ஜின்’ களில் குடிவழிக் கூறுகள் (எ-டு. கண், காது மூக்கு, உரோமம், உடல்நிறம் போன்றவை) அடங்கியுள்ளன எனறு கருதுவது தவறு. ஜீன்கள் யாவும் வேதியியல் முறையிலேயே செயற்படுகின்றன. உடலின் ஒவ்வோர் உயிரணுவிலும் உள்ள ஜீன்கள் வெவ்வேறு விதமான ஹார்மோன்களை உண்டுபண்ணுகின்றன என்றும், அவற்றின் மூலமாகவே உறுப்புகளின் தன்மைகள் அமைகின்றன என்றும் அறிவியலறிஞர்கள் ஆய்ந்து கண்டறிந்துள்ளனர்.

ஆண்தன்மையை விளைவிக்கும் ஜீன்'களும் பெண்தன்மையை விளைவிக்கும் ஜீன்'களும் இருபாலாரிடமும் உண்டு. அவை வெவ்வேறு அளவுகளில அமைந்திருக்கும். இந்த இரண்டுவித “ஜீன்கள் X நிறக்கோல்களிலேயன்றி ஏனைய பல கிறக்கோல் களிலும் உள்ளன. சிறிய Y நிறக்கோலில் இத்தகைய ஜீன்கள் இருபபதாக இதுகாறும் கண்டறியப் பெறவில்லை. எனவே,

6. gsr6ir - Genes.

7. சிலவகை உயிரினங்களிடம் Y நிறக்கோல்களே இல்லா திருப்பதும், ஒரே ஒரு X நிறக்கோல் பெறுவதால் ஆணும், இரண்டு