உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பெரும் ஆராய்ச்சிகள் 75.

உயிருள்ள பொருள்களிடம் அமைநதுள்ளதைப் போலவே மனிதர்க ளிடமும் அமைந்துளளது என்பதை நாம் உடனே ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றோம்.

கி. பி. 1856இல் மெண்டல் பட்டாணிகளை ஒட்டி ஒட்டி வேறினச் சேர்க்கையால் உண்டாகும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். ஒவ்வோர் ஆண்டுக் கோடைக் காலத்திலும் இந்தச் சோதனைகள் பின் என்ற இடத்திலுள்ள அவருடைய மடத்தைச் சார்ந்த 20 அடிக்கு 120 அடி அளவுள்ள ஒரு சிறிய தோட்டத்தில்தான் செய்யப்பெற்று வந்தன. பட்டாணி யின் மரபுவழிபற்றிய அறிவு மனிதர்களின் மரபுவழிபற்றியும் அறிவதற்குத் துணைபுரியும் என்று அவர் அக்காலத்தில் சிறிதே னும் சிந்திக்கவில்லை. மெண்டல் கூர்த்த மதியையுடையவர் : எதையும் எளிமையாகவும் நேர் முறையிலும் ஆராயும் பண்புடைய வர். பல இடங்களிலிருந்து மெண்டல் 34 வகைப் பட்டாணி விதைகளைப் பெற்று அவற்றை இரண்டு ஆண்டுகள் பயிரிட்டு அவை யாவும் தூய்மையான இனத்தைச் சேர்ந்தவை என்று உறுதிப் படுத்திக்கொண்டார். இந்த 34 வகைகளிலும் 22 வகைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தம் பரிசோதனைக் காலமாகிய எட்டாண்டுகளில் மீண்டும் மீண்டும் பயிரிட்டதில் அவை மாறாமல் தூய்மையாகவே இருந்தன.

ஒருவகைப் பட்டாணியை மற்றொரு வகைப் பட்டாணியுடன் சேர்க்கை புரியச் செய்து அதனால் கிடைக்கும் கலப்பு இனங்களைக் கவனிததலே அவரது முதன்மையான நோக்கம். ஒவ்வொரு தடவையிலும் ஒரே பண்பில்தான் தம் கவனத்தைச் செலுத்தினார். எடுத்துக்காட்டாகச் சிவபபு நிற மலர்களையுடைய தூய்மையான இனப் பட்டாணி வகையை வெண்மை நிற மலர்களையுடைய பட்டாணியுடன் ஒட்டிச் சேர்ததார். இவ்வாறு நூற்றுக்கணக்கான

5. பிரன் (Bruenn) என்பது முன்னர் ஆஸ்திரியாவைச் சார்ந்தது. இப்பொழுது செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்து ப்ர்னோ (Brno) என்று வழங்குகின்றது.

6. InLih - Monostry.