பக்கம்:விசிறி வாழை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விசிறி வாழை

சரஸ்வதியைப் பிரிந்து இன்று பதினந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் வைராக்கிய புருஷராக, சலனமற்ற தபசியாக, திடசித்தம் வாய்ந்தவராக வாழ்ந்து விட்ட சேதுபதியின் உள்ளத்தில் பார்வதி பெரும் புயலைக் கிளப்பியிருந்தாள்.

‘பாரதி! நீ போய்ச் சாப்பிடு எனக்காகக் காத்திருக்க வேண்டாம். காலேஜுக்கு நேரமாகிவிடும் உனக்கு. நான் கல்கத்தாவுக்கு டிரங்க் கால் புக் செய் திருக்கிறேன்.??

‘பிறந்த நாளன்றுகூட என்ைேடு சாப்பிடக் கூடாதா அப்பா எப்போது பார்த்தாலும் வேலேதானு??? சலிப் போடு கூறினுள் பாரதி.

‘இன்றைக்கு உனக்குப் பிறந்த தினம் என்று நீ என் னிடம் நேற்றே சொல்லியிருந்திருக்கக் கூடாதா?”

‘நேற்று நான் சொன்னபோது பேஷ் பேஷ்’ என்றீர் களே அதற்குள் மறந்து விட்டீர்கள்ா?

  • நீ என்ன சொன்னய் என்பதே இப்போது என் ஞாபகத்தில் இல்லை. நான் ஏதோ கவனமாக பேஷ், சொல்லி யிருக்கிறேன்! பரவாயில்லே உன் சிநேகிதிகளெல் லாம் வந்திருக்கிறர்கள் இல்லையா! அவர்களே யெல்லாம் சாப்பிடச் சொல்லு?’ என்றார் சேதுபதி.

‘அப்பா, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டே போகிறது. நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் மறுபடியும் மறந்து போனலும் போவீர்கள். ஆகையால் எனக்கு இப்போதே பர்த்டே பிாசன்ட் டைக் கொடுத்து விடுங்கள்?? என்றாள் பாரதி.

  • பிரசன்ட்டா! என்ன பிரசன்ட் கொடுக்கிறது??

‘ஜப்பானிலிருந்து நாய் பொம்மை ஒன்று வந்திருக்கிற தாம். யாராவது கூப்பிட்டால் அந்தப் பொம்மைநாய் தான கவே வாலே ஆட்டிக் கொண்டு ஓடி வருகிறதாம்.”

‘தானகவே எப்படி ஓடி வரும்? யாராவது கீ கொடுத்து வைத்திருப்பார்கள்.:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/76&oldid=689577" இலிருந்து மீள்விக்கப்பட்டது