பக்கம்:விசிறி வாழை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஏழு 78

அதுதான் இல்லை; கூப்பிடறவர்களின் சத்தத்தைக் கேட்டுத் தானகவே ஓடி வருகிறதாம்.’’

‘விஞ்ஞானம் அவ்வளவுத் தூரம் வளர்ந்திருக்கிறது. அந்த நாய் என்ன விலையாம்?’

‘அறுநூறு ரூபாயாம்!’

  • ரொம்ப அதிகம்...”

“கூப்பிட்டால் ஓடி வருகிறதே! அதுக்கு இது ஒரு வில்யா???

‘தெருவிலே போகிற நாய்க்கு ஒரு பக்கோடாவைக் காட்டிக் கூப்பிட்டால் போதுமே! உன் கூடவே ஓடி வருமே! இதுக்குப் போய் அறுநூறு ரூபாய் செலவழிப்பார்களா?’ என்று சிரித்தார் சேதுபதி.

பாரதியும் சிரித்து விட்டாள். -

‘நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அறுநூறு ரூபாய் ரெடியா இருக்கனும்’ என்று சொல்லிக் கொண்டே ஒடினுள் பாரதி.

‘பாரதி!’ என்று அழைத்தார் சேதுபதி.

வேகத்துடன் புறப்பட்ட பாரதி, சேதுபதியைத் திரும்பிப் பார்த்து என்னப்பா? என்று கேட்டாள். -

‘ஆமாம், உங்க பிரின்ஸிபாலக் கூப்பிடலயா?”

‘அழைச்சிருக்கேன், அநேகமா, இப்ப வந்தாலும் வருவாங்க..?? -

பிரின்ஸிபால் வரப் போகிருள் என்னும் சேதி சேது பதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஆயினும், அவர் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.

நேற்றுகூடப் பார்வதியைச் சந்தித்தபோது பொது வாகப் பல விஷயங்ககாப்பற்றி அவர் வெகு நேரம் விவாதித் துக் கொண்டிருந்தார். எல்லா விஷயங்களிலும் அவளுக்குத் தெளிவான, நிச்சயமான அபிப்பிராயம் இருந்தது. ஆழ்ந்த படிப்பும், படிப்புக்கேற்ற பண்பும், எதையும் சூட்சுமமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/77&oldid=689578" இலிருந்து மீள்விக்கப்பட்டது