பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் கள் நடத்திவந்தார். புஸ்தகத்தில் சொல்லியிருந்த சோதனைகளை நடத்திப் பார்ப்பதோடு சொந்தமாக வும் புதிய சோதனைகள் செய்துவந்தார். இந்த விதமாக விஞ்ஞானியாக ஆகிவிட்டார்.

அவர் ஊக்கமும் உற்சாகமும் மிகுந்தவரா யிருந்தபடியால் தனியாக இருக்கும்பொழுது தம் முடைய எண்ணங்களே வாய்விட்டு பிரசங்கம்போல் சொல்வது அவருக்கு வழக்கமாகி வந்தது. ஒரு நாள் அவருடைய டாக்டர் பக்கத்து ஊரிலிருந்த ஒரு நோயாளிக்குக் கொடுத்து வரும்படியாக ஒரு மருத்து பாட்டிலே டே வியிடம் கொடுத்து அனுப்பி னர். ேட வி நோயாளியிடம் சென்றபொழுது மருந்துபாட்டில் கையில் காணவில்லை. அவர் வழி யில் தாமாகவே பிரசங்கம் செய்து அதைத் தம்மை அறியாமலே எறிந்து விட்டார். திரும்பி வரும் பொழுது அது பாதையின் ஒரத்திலிருந்த வயலில் கிடக்கக் கண்டார்.

அதன்பின் 1798ம் வருஷத்தில் இவருடைய நண்பர் ஒருவர் இவருக்கு கிளிப்டன் என்னும் இடத்திலிருந்த விஞ்ஞானி ஒருவரிடம் வேலைவாங் கிக் கொடுத்தார். அந்த விஞ்ஞானி நோய்களைக் குணப்படுத்த மருந்துகளைப் போலவே வாயுக்களை யும் உபயோகிக்கலாமா என்னும் விஷயமாக ஆராய்ச்சிகள் கடத்திக்கொண்டிருந்தார். அத் துடன் வேண்டிய சாதனங்களுடன் ஒரு நல்ல ஆராய்ச்சி சாலையும் அவரிடமிருந்தது. இது டே விக்குப் பொன்போன்ற சந்தர்ப்பமாக அமைந்து விட்டது. 202