பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115 போது, வாழ்க்கையைச் சுவையாக அனுபவிக்கும் காலமாக அல்லவா நாம் நடுத்தரப் பருவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கடுத்தர வயதாக-பெண்களுக்கு 25லிருந்து 35 என்றால், ஆண்களுக்கு 30லிருந்து 45 வரைதான் இல்லறச் சுவையை தெளிவாக உய்த்துணரும் சக்தியைத் தருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்

நடுத்தர வயதில் உடலின் மாற்றம் ஆனால் இந்த நடுத்தரப் பருவத்தில்தான் நாம் எதிர் பாராத உடல் மாற்றத்தை சந்திக்க நேர்கிறது. உடலில் உள்ள உள்ளியக்கம் தளர்கிறது. சதைத் திரட்சியின் இறுக்கம் குறைகிறது. உடலெங்கும் கொழுப்பு ஏறி தடித்தன்மை ஏற்படுகிறது. அதனால் சதை வீரியம் மறைகிறது. தேகத்தின் வலிமை இறக்கம் காண்கிறது. இரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது.

அத்துடன் உள்ளிழுக்கும் உயிர்க் காற்றின் அளவும் குறைந்து, செயல்படுகின்ற திசுக்களின் வேலையும் முன்னைவிட குறைவாகவே போகிறது. இவ்வாறு உடல் தளரும்போது உடல் உறவில் எழுச்சியும், கிளர்ச்சியும் சற்று தாழ்ந்தே தெரிகிறது.

குளத்தின் கரையில் அமர்ந்து கொண்டு எத்தனை முறை நீரில் மிதக்கும் பாசியைத் தள்ளிவிட்டாலும், மீண்டும் அதே இடத்திற்கு வந்து மூடிக்கொள்ளும் பாசியைப்போல, எவ்வளவுதான் மருந்தும்வைத்தியமும் மாறி மாறி உடலுக்குத் தந்தாலும். தளர்ந்த உடலில் நோய்கள் வந்து தவழ்ந்த வண்ணமாகத்தானே விளங்கும்.