உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 கொழுப்பு உடலில் ஓங்கி, உழைப்பு உடலில் ஒய்கின்றபோது கொக்கரிக்கும் நோய்க் கூட்டத்தினை கோலமிட்டு அழைப்பது முதலில் அஜீரணம்தான். உண்னும் உணவானது ஜீரணிக்காதபோது அடுத்து வருவது மலச்சிக்கல். மலச்சிக்கல் வந்தால் போதுமே அது வாழ்க்கையையே சிக்கலாக்கிவிடும்.

அதிக மலச்சிக்கல் தொடரத்தொடர, அது நோயை அழைத்துக் கொண்டு வந்துவிடும். இவ்வாறாக, ஒன்றன்பின் ஒன்றகத் தொடர்ந்து சக்தியை இழக்கச் செய்யும். பிறகு மூட்டுக்கு மூட்டு வலி, ஹெர்னியா, அடிக்கடி சளி பிடித்தல், இருமல், மூச்சிழுத்தலில் கஷ்டம் போன்றவற்றுடன் நோய் விரிந்து விடுகிறது. நிற்கும் பொழுதும், கடக்கும் பொழுதும், தொய்வு விழுந்த தோற்றம். தொட்டில்போல் வயிறு விரிந்தவாறு தேகத்தில் படர்ந்து, உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களுக்கும் வலியை உண்டாக்கிவிடும்.

இவ்வாறு, நோய் வராமல் தடுக்கவும், வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் வளமையாகவே வாழ்ந்துவிட வேண்டும் என்று வானேங்கிய நினைவும், செயலும் நடுத்தர வயதில் கொள்ள நாம் என்னசெய்யவேண்டும்? உடலை இயக்கவேண்டும். வேறு வழி இல்லை.

வலிமை பெற வழிகள் ஓடாத இயந்திரங்கள் துருப்பிடித்து விடுகின்றன. பாடாத தொண்டையின் ராகத்தில் பிசிறு விழுந்துவிடுகிறது. ஆகவே உழைக்காத உடல் உலக வாழ்க்கைக்கு ஒரு பாரமாகும்.