உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

95


சி. பி. சிற்றரசு 95 வாகப் பேசமாட்டார்களா? சாக்ரடீஸ்! நீ உயிரோடு தான் வாழ்வாய். ஆனல் எப்படிப்பட்ட வாழ்வு தெரியுமா? எல்லோரையும் பாராட்டிக் கொண்டு முகமன் பேசிக்கொண்டு வேலைக்காரணுய் வாழ்வாய். துன்மார்க்கனைத்துளயவனே என்று வாழ்த்துவாய். மதி கேட்டவனை மேதாவியே என்று போற்றுவாய். அறிவில்லாதவனே அறிஞனே என்று துதிப்பாய். வேறு எப்படி நீ வாழ முடியும். திக்கற்றவகை, அனதையைப்போல் வாழ்வாய். அங்கே வேறு என்ன செய்வாய். வெளி நாடான தெசாலிக்குச் சென்று நீ எதையோ உண்டு வாழ்வாய். நீதி, நேர்மை, இவற்றைக் குறித்து நீ பேசியதெல்லாம் என்ன ஆவதோ தெரியவில்லை. குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன். அவர்களை வளர்த்துக் கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று சொன்னலும் அவர்களைத் தெசாலிக்கு அழைத்துச் செல்வாயா? ஏதென்ஸ் நகரக் குடியுரிமையை அவர்கள் இழக்கும்படிச் செய்யப் போகிருயா? இதுதான் நீ அவர்களுக்குச் செய்யும் நன்மையா? அல்லது அவர்களை விட்டுப் போனலும் உயிரோடுதானே இருக்கிறேன். இங்கேயே அவர்கள் இருந்தால் உன் நண்பர்கள் அவர்களை நன்ருகக் கவனித்துக்கொள்வார்கள் என்பது உம்முடைய எண்ணமா? நீ தெசாலியில் வாழ்ந்தால்தான் உன்னுடைய நண்பர்கள் உன் குழந்தையைக் கவனித்துக்கொள்வார்களா ? நீ மறு உலகத்தில் இருந்தால் நண்பர்கள் உங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள மாட்டார்களா? உன் நண்பர்கள் என்று நீங்கள் சொல்லிக்கொள்பவர்கள் நல்லவர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/100&oldid=1331483" இலிருந்து மீள்விக்கப்பட்டது