உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

விஷக்கோப்பை


94 விஷக்கோப்பை

இப்படி நீ முறை தவறி நடந்தால் உனக்கும் உன் நண்பர்களுக்கும் என்ன ந ன் ைம கிடைக்கப் போகிறது. சட்டத்தைக் குலேக்கும் இவன் இங்கே ஏன் வந்தான். என்றுதான் வெளிநாட்டார் உன்னை வெறுப்போடு நோக்குவார்கள். அங்கே உள்ள நீதிபதிகள் உள்ளத்திலும் நாங்கள் உன்னைத் தண்டித்தது நியாயமே என்று படும்படிச் செய்து விடுவாய். சீரான அரசாங்கம் நடக்கும் ஊர்களை விட்டும், நல்லவர்களிடமிருந்தும் இப்படி நீ தப்பி ஒடிக்கொண்டே இருப்பாயா? இந்த மாதிரி ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு நாண மின்றி ஒடிக்கொண்டிருப்பாயா? சரி, நீ அங்கு என்ன பேசுவாய். இ ங் கு சொன்னதைப்போல் நேர்மை, நீதி, சம்பிரதாயங்கள், சட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் மக்கள் மேலாகக் கருத வேண்டும் என்று சொல்வாயா? அந்த அயலார் நீ புறப்பட்டு வந்த விபரங்களை யெல்லாம் கேட்டு எல்லாரும் நகைக்கும்படி செய் வாய். ஏனய்யா இந்தத் தள்ளாத வயதில் இங்கே ஒடி வந்தாய்? இன்னும் கொஞ்ச காலமே உயிர் வாழப் போகிருய். அ ப் படி இருந்தும் வீனசை கொண்டு சட்டங்களையே மீறிவிட்டாயே உனக்கு வெட்கமில்லையா? என்று கேட்பவர் யாரும் இருக்க மாட்டார்களா? அவர்கள் மகிழ்ச்சியோடிருக்கும் போது ஒரு வேளை அப்படி கேட்காதிருக்கலாம். அவர்களுக்குச் சினம் வந்துவிட்டால் உன்னை இழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/99&oldid=1331482" இலிருந்து மீள்விக்கப்பட்டது