பக்கம்:விஷக்கோப்பை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

23


சி. பி. சிற்றரசு 23 நன்மை ஏற்படுவதைவிட தீங்குதான் ஏற்பட வேண்டுமென்று யாராவது நினைப்பார்களா? பதில் சொல்லுங்கள். மெலி ; உண்மையாக விரும்பமாட்டார்கள். சாக் நான் இளைஞர்கள் மனதைக் கெடுத்துவிடு கிறேன் என்று குற்றஞ் சாட்டுகிறீர்களே, தெரிந்து சொல்கிறீர்களா, தெரியாமல் சொல் கிறீர்களா! - மெலி : (மெளனம் சாதிக்கிருன்.) மெலிடஸ் தக்க விடையளிக்கத் தெரியாமல் விழிக்கிருன். சாக் பார்த்தீர்களா நீதிமான்களே ! இவரே இப் படி என்ருல் மற்ற இருவரை ஏன் விசாரிக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒன்று கேட்கலாம் - நீயே அகால மரணத்தைத் தேடிக் கொள்ளப் பார்க்கிருயே! இது உனக்கு வெட்கமாக இல்லையா? என்று நீங்கள் கேட்கக்கூடும். அதற்கு நான் ஒரு தெளிவான பதிலைக் கூறு கிறேன்! மனிதன் எவனும் சாவைப்பற்றியோ வாழ்வைப்பற்றியோ எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. தான் செய்யும் காரியம் சரியா, தவரு என்று மட்டுமே, அவன் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால், உங்கள் கருத்துப்படி பார்த் தால், டிராய் நகரில் மடிந்த வீரர்கள் எதற்குமே தகுதியற்றவர்கள் என்ருகிவிடுமே. அவர்கள் மானமிழந்து வாழ்வதைவிட ஆபத்தில் சிக்கி வாழ்வது சிறந்தது என்று கருதிய தெடிசின் மகன் அகிப்பசை நீங்கள் வீரனாக மதிக்கமாட்டீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/28&oldid=1331411" இலிருந்து மீள்விக்கப்பட்டது