உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

விஷக்கோப்பை


28 விஷக்கோப்பை

புதிர், ஆகவே, அந்த மகான்களிடத்தில் பக்தி செலுத்த வேண்டும் என்று பக்கத்தில் இருந்த பாமர மக்களைத் தூண்டிய அவர்கள் படாடோபத்தையும் போலி பக்தர்களையும் என் சிந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. பல நாட்கள், ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றித் திரிந்த அவர்களுடைய உண்மையான நய வஞ்சக நாடகத்தை மக்களுக்குக் காட்ட, அவர்கள் முன்பு தொங்கவிடப்பட்டிருந்த திரையைக் கிழித் தெறிந்தபின், மக்கள் கைகொட்டிக் கேலி செய்ய ஆரம்பித்தனர். அதன் பயனக அவர்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்குப் பதிலாக என் மேல் ஆத்திர நெருப்பை அள்ளி அள்ளி வீசினர்கள். அதன் விளைவுதான் நான் இன்று உங்கள் முன்பாகக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கின்றேன். நான் தெய்வீகத்தை நம்புகின்றேன் என்று என் நண்பர் மெலிடஸ் ஒப்புக் கொள்ளுகின்றபோது நான் எப்படி நாத்திகனகமுடியும். படையை ஒப்புக் கொள்ளுகிற நான் எப்படி படைத்தலைவனை மறுக்க முடியும். படைப்பும் ஆண்டவனின் சட்டவிரோத மான குழந்தைகளா? அல்லவா ? என்பதை இன்னும் உலகம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. ஆனால், நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என ஒப்புக்கொள்ள மறுக் கிறேன். நான் மாத்திரமல்ல. சாமாஸ் நகரத்தில் வாழ்ந்த ஜினே என்பவர் ' நான் கல்லுக்கும் மண் ஒதுக்கும் பிறக்கவில்லை. ஒரு பெண்ணுக்குத்தான் பிறந் தேன்.’’ என்று சொன்னதையே நான் இங்கே வலியு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/33&oldid=1331416" இலிருந்து மீள்விக்கப்பட்டது