பக்கம்:விஷக்கோப்பை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

29


சி. பி. சிற்றரசு 29 றுத்துகின்றேன். ஆண்டவனேப்பற்றியும் அவனுடைய படைப்பைப்பற்றியும் ஆராய்ச்சி செய்வதோ நாத்தீக மென்று சொன்னல், ஆண்டவனே ஒப்புக் கொள்ள எங்கே மறுத்து விடுகிருர்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்தீகம் என்பேன். ஆண்டவனைத் தொழுவதும், விடுவதும் அவரவர்கள் தனிப்பட்ட கருத்துக்களேயன்றி, ஆண்டவனே எங்கேயோ இருந்து இழுக்கச் சமுதாய வலையை வீசி வீண் பொழுது போக்கலும், வெட்டி விவாதங்கள் நடத்த லும், வேடிக்கையில் தொடங்கி வாள்கொண்டு தாக்கி ஒருவர்க்கொருவர் வெட்டி மடியக்கூடாதென்பதே என் நோக்கமாகும். ' உலகில் நிலைத்துள்ள பொருள் யாதொன்று மில்லை. யாதேனுமிருப்பினும் அதை காம் உணர முடியாது. அவ்வாறென்றிருந்து அதனை நாம் உணர்ந் தாலும், பிறர்க்கு அதைத் தெரிவிப்பது இயலாத காரியம்,' என்று அறிஞர் ஜார்ஜியாஸ் என்பவர் வெளியிட்ட கருத்துக்களையும் இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன். மேலும், ' தெய்வங்கள் உண்டென்பதும், தெய்வத்தின் குணம், ஆற்றல் முதலி யன இவை என்பதும், நாம் ஒரு முடிவாகக் கூறக்கூடிய தல்ல. நமது வாழ்நாள் அதற்குப் போதாது. மனிதனின் ஐம்புல உணர்ச்சிக்கும் மனத்திற்கும் எட்டாத பொருள் களே உலகிலில்லை.' என்று பித கோரஸ் என்ற ஆதிதத்துவ ஞானி உரைத்ததையும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/34&oldid=1331417" இலிருந்து மீள்விக்கப்பட்டது