பக்கம்:விஷக்கோப்பை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

விஷக்கோப்பை


32 விஷக்கோப்பை

மலிந்ததாகவோ இருக்க வில்லை. எனக்கென்று என்னல் நியமித்துக்கொள்ளப்பட்ட சீடர்கள் யாரும் எனக்கென்று இல்லை. என் வாதங்களுக்குச் சட்டரீதி யான அல்லது சட்டவிரோதமான கட்சியோ கழகமோ இயக்கமோ, அதற்கோர் அமைப்பு முறையோ இருந் ததில்லே. இப்போது இருக்கவுமில்லை. நான் யாருக் காக உழைக்க வேண்டுமென்று கருதினேனே, நான் யாரைப் பரிதாடக் கண்கொண்டு பார்த்தேனே, நான் எந்த சமூகத்தைக் கண்டு கண்கலங்கினேனே, நான் எந்த சமூக கோபுரத்தின் கட்டுக்கோப்புகள் நிலை குலைந்து வேரற்ற மரம்போல் விழக்கண்டேனே, அந்த மக்கள் கூடும் இடங்களெல்லாம் என் தர்க்கவாதத்தை ஆரம்பித்திருக்கின்றேன். எந்தவிதப் பணச்செலவும் யாருடைய உடல் உழைப்பும் தேவைப்படாமலே தொடங்கியிருக்கின்றேன். ஜிம்காணு, சந்தை, நாடகக் கொட்டகைகள், கடைத்தெருக்கள், களியாட்டம் நடக்கும் இடங்கள். அறமன்றங்கள், சங்கீத அரங்கு கள், நடனச்சாலைகள், விருந்து மண்டபம், வேடிக்கை நடக்கும் இடங்கள், குளக்கரைகள், ஆற்றங்கரைகள், அயலார் தங்கும் சத்திரங்கள் எங்கும் என்னேக் காண லாம், நான் நகரத்தை விட்டு வெளியேறுவது மிகமிக அரிது. நான் கல்வியின் நண்பன். அறிவின் அன்பன். தர்க்கத்தின் தூதுவன். உண்மைக்கு நேசன். நீதியின் பிரதிநிதி. மனித இனமே எனக்குப் பலவற்றைப் போதித்தது. எந்த மனித இனத்திலிருந்து நான் பல வற்றைக் கற்றுக்கொண்டேனே, அதற்குக் கைமாருக அந்த மனித இனத்தின் உயர்வுக்காக பாடுபட்டேன். வயல்களும் செடிகளும் எனக்கு எதுவுமே போதிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/37&oldid=1331420" இலிருந்து மீள்விக்கப்பட்டது