பக்கம்:விஷக்கோப்பை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

33


சி. பி. சிற்றரசு வில்லை. நான் என் சொந்த வாழ்வைக் கவனிக்காமல் பொது வாழ்வைக் கவனித்ததால், என் வாழ்க்கைப் படகு எவ்வளவு கொந்தளிப்புக்கடலில் தத்தளிக்கிறது என்பதை நான் நன்ருக உணர்ந்தே இருக்கிறேன். என்ருலும் நான் கவலைப்படவில்லை. நான் உலகத் தைப் பற்றியெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டி ருக்கின்றேன். என் வீட்டைப்பற்றி ஒன்றும் தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை என்று சொல்வது உண்மை தான். உலகத்தைப்பற்றி சிந்திக்கின்ற ஒருவனுக்கு வீட்டைப்பற்றி சிந்திக்க நேரமேது ? இந்த, என் நல்ல பொது நோக்கமே எனக்குப் பல நல்ல நண்பர்களை உண்டாக்கித் தந்தது. அதற் காக நான் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். - ஒரு நாட்டின் சட்டரீதியான குடிமகன் தன் நாட்டின் உயர்வுக்காக எ ன் னெ ன் ன செய்ய முடியுமோ, அவ்வளவும் நான் செய்திருக்கின்றேன். போர் வீரகை நின்று எதிரிகளின் வாளுக்கு நான் கலங்காது போர் செய்திருக்கின்றேன். அந்த ஒரு நல்ல பயிற்சிதான் என்னை இன்றும் என் உறுதி யிலிருந்து தளராமல் செய்திருக்கிறது. அதற்காக போர்களத்திற்கு என் நன்றி. எப்படி இரணகளத்தில் என் தலைவன் உத்திரவு வரும்வரையில் என் இடம் விட்டுப் பெயராமல் இருந்தேனே, அதே போலத்தான் என் கேள்விகளுக்குத் தக்கதோர் விடை நானிலத்தில் கிடைக்கும் வரையில் என் முடிவை நான் மாற்றிக் கொள்ள முடியாது. இறப்பு இயற்கையாகவே என்னைத் தேடி வந்தாலும், அல்லது உங்கள் தீர்ப்பே வி-3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/38&oldid=1331421" இலிருந்து மீள்விக்கப்பட்டது