உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

விஷக்கோப்பை


34 விஷக்கோப்பை

என்னை மரண மண்டபத்துக்கழைத்துச் சென்ருலும் நான் என் முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. மக்களுக்கு விருப்பமானதைச் சொல்லி நான் பெருமையடையவோ, வெறுப்பானதைச் சொல்லி சிறுமையடையவோ எண்ணவில்லை. நான் அப்படிச் செய்தால் மிருகங்களைப் பழக்குபவனுக் கொப்பா வேன். ஏனெனில், மிருகங்களுக்கு வெறுப்பானதைச் செய்தால் தன்னைக் கொன்றுவிடும் என்று பயந்து, அவைகளுக்கு உவப்பானதையே செய்து உயிர் வாழ எண்ணும் ஒரு காட்டு மனிதனுக்கு ஒப்பாவேன். மேலும் அந்த முறையைக் கையாண்டால் பகுத் தறிவுள்ள மக்களை மிருகங்களாக்குகிறேன் என்று என் மனமே என்னே வாட்டுகின்றது. அறிஞர்களே ! அண்டகோளங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து என் மனசாட்சிக்கு விரோதமான பொய்களால் அலங்கரிக்கப்பட்ட கற்பனை உலகுக்கு மக்களை நான் அழைத்துச் செல்லவில்லை. நான் எடுத்துக்கொண்ட பணி மிகமிகச் சாதாரணமானது. மக்களுக்கு வேண்டியது. அவர்கள் வாழ்க்கையில் அன்ருடம் நடமாடும் சொற்களான பரிதாபம், ஈவு, இரக்கம், நீதி, நேர்மை, அடிப்படை, காரணம், காரியம், உணர்ச்சி, அன்பு, சூழ்ச்சி, சுயநலம், கோழைத்தனம், நாடு, ஆள்பவன், ஆளப்படுவோன், அரசாங்கம், சட்டம், சமூகம், எப்படி ஒரு மனிதன் ஆளத் தகுதியுடையவளுகின்ருன், ஒரு நல்லவனைத் தேர்ந்தெடுக்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முறைகள் என்ன என்பன போன்றவைகளின் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/39&oldid=1331422" இலிருந்து மீள்விக்கப்பட்டது