பக்கம்:விஷக்கோப்பை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

35


சி. பி. சிற்றரசு 莒高 யான பொருளைத் தேடித் திரிந்தேன். உதாரணத் துக்காக ஒன்று சொல்கின்றேன். - - ஒரு நண்பன் என்னிடம், 'நேர்மை' என்ற வார்த் தையைப் பயன்படுத்தினன். நேர்மை என்ருல் என்ன? என்று அவனைக் கேட்டேன். வாங்கியதைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் நேர்மை என்ருன். அப்படியானல், ஒருவன் நல்ல சுபாவத்தோடு இருக் கும்போது ஒரு கூரிய வாளை நம்மிடம் கொடுத்து வைத்தான் என்று வைத்துக்கொள்வோம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் பைத்தியம் பிடித்தவனுப் விட்டான். அப்படி பைத்தியமாய்விட்ட அவன், நம்மிடம் வந்து முன்பு அவன் நம்மிடம் கொடுத்த வாளைத் திருப்பித் தரும்படி கேட்டால் கொடுத்து விடலாமா? அதுதான் நேர்மையா? என்று கேட்டேன். நண்பன் ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டான். அது மாத்திரமல்ல, அவன் அன்று முதல் என் மோசமான எதிரியாகவும் மாறிவிட்டான். அடுத்து ஒருவன் வந் தான். நீதி, நட்பு, இவைகள் என்னவென்று கேட் டேன். இரண்டும் ஒன்றுதான் என்ருன். இல்லை, என்று ஒரு உதாரணத்தின்மூலம் விளக்கினேன். அதாவது, தம்பி கொலைகாரன், அண்ணன் நீதிபதி-நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்திலேயே தம்பி கொலேக் குற்றம் சுமத்தப்பட்டு குற்றக் கூண்டிலே நிற்கிருன். அந்த நீதிபதி-குற்றவாளி தம்பி என்பதற்காக நட்பைப் பார்ப்பதா. குற்றவாளி தன் சொந்தத் தம்பியா யிருந்தாலும் நீதியை நிலைநாட்டுவதா. ஆகையால் நீதியும் - நட்பும் ஒன்றல்ல என்றேன். இந்த விளக் கம் அவனை என் எதிரியாக்கி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/40&oldid=1331423" இலிருந்து மீள்விக்கப்பட்டது