பக்கம்:விஷக்கோப்பை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

விஷக்கோப்பை


36 விஷக்கோப்பை

மூன்ருமவன் ஒருவன் வழியிலே சந்தித்தான். அவனிடம் அழகு என்ருல் என்னவென்று கேட்டேன். பார்ப்பதற்கு அழகாக கவர்ச்சியாக இருப்பது அழகு என்ருன். உடலைப்பற்றிச் சொல்கிறீரா - உள்ளத் தைப்பற்றிச் சொல்கிறீரா என்று கேட்டேன். உடலைப் பற்றித்தான் என்ருன். நாம் திருமணம் செய்துக் கொள்ளும்போது மனைவி அழகாயிருந்தாள், சில நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு விபத்தில் சிக்கி முகமெல்லாம் கருகருத்து அங்கஈன்மாய் விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். அ ப் போது கணவன் அவனை கவனிக்காமலிருக்க முடியுமா? உடல் அழகு போனலும், உள்ளத்தின் அழகு இருக்குமே, அதைக் கொண்டு ஆறுதல் அடையலாமல்லவா. ஆகையால் உடல் அழகைவிட உள்ளத்தின் அழகைக் கண்டோமானுல் இந்த சிக்கலுக்கே இடமில்லே என்றேன். இதை அவன் ஒப்புக்கொள்வதும் ஒப்புக் கொள்ளாததும் அவன் விருப்பந்தான் என்ருலும் அவனும் என் தீராத பகைவனாய் விட்டான். இப்படி எவ்வளவோ இந்த நாற்பதாண்டுகளாக. , மக்கள் திருந்த வேண்டும் என எண்ணினேன். ஆகவே நான் எப்போதும் யாருக்கும் ஆசிரியனுக இருந்து எதையும் போதித்ததில்லை. என்னை யாரும் குருவெனக் கொண்டாடியதுமில்லை. என்ன நானே கேட்டுக் கொண்டேன். அதன் எதிரொலி மக்களின் உள்ளத் தில் ஒலித்தது. அப்படிக் கூடியிருந்த மக்களில் சிலர் என்னைப் பின்பற்றினர்கள். அவர்களில் ஒருவன்தான் என் எதிரி மெலிடசின் மகன். நான் யாரையும் கெஞ்சிக் கூத்தாடி என்னேக் குருவாக ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/41&oldid=1331424" இலிருந்து மீள்விக்கப்பட்டது