உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

43


சி. பி. சிற்றரசு 43 ஏதன்ஸ் நகரமா இந்தத் தகாத தீர்ப்பளித்தது? நம்ப முடியவில்லை. நல்லோர்கள் தீக்கனலை வீசுவார்கள். பகை நாடுகள் பரிகசிக்கும். இதேைலற்படும் உள் நாட்டுக் கலத்தைச் சாதகமாக்கிக் கொண்டு உள்ளே நுழையலாமா என்று மாற்ருர் எண்ணிக்கொண்டிருப் பார்கள், அணை உடைந்து ஆற்று நீர் கட்டுக்கடங் காமல் ஒடிப் பல பட்டணங்களை அழித்துப் பாழாக்கு வதைப்போல், பெரிய பெரிய மேதைகள் தங்கள் வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டுச் சேமித்து வைத்த நீதி, சுதந்திரம் என்ற வார்த்தைகள் சிறகடித்துப் பறக்கும் சிட்டுப்போல் ஓடிவிட்டது. இதற்கும் சிறிது கீழ்த்தர அரசியல் உரிமைகள் பெற்று வாழும் நாடுகளெல்லாங்கூட எள்ளி நகையாடும். சுதந்திர மாம், குடியரசாம், ஒரு கொடியவன் காலடியில் சிக்கிச் சீரழிந்துவிட்டன. மலரை வைத்து மணம் பார்ப்பதற்குப் பதில் கையால் கசக்கிவிட்டார்கள். ஏதன்ளை எல்லா வகையாலும் பண்படுத்திய பெரிக் ளஸ் என்ற பெரியோனைப் பெற்றெடுத்த தாயகமா இம் மாபாதகச் செயலைச் செய்தது, நீதி நீர்மேல் கிழித்த கோடாயிற்ரு? கொடிது கொடிது கோர சம்பவம். அன்பனே, அறிஞனே, அதிலும் ஒரு ஏழையை, நமக்கு முன் பிறந்தவனே, நாட்டின் நலனுக் காகப் போர்க்களம் சென்றவனை, இரணகள மண்ணைத் தன் ரத்தத்தால் செம்மண் ஆக்கிய சுத்த வீரனே, அஞ்சா நெஞ்சனை, மக்களின் நண்பனை, சிந்தனைச் செல்வன, கொலைக்களம் அனுப்புவது கொடிது! கொடிது! மகாக் கொடிது. தீராத பழி, மறைக்க முடியாத சரித்திர வரலாறு, மறக்க முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/48&oldid=1331431" இலிருந்து மீள்விக்கப்பட்டது