பக்கம்:விஷக்கோப்பை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

விஷக்கோப்பை


44 விஷக்கோப்பை

பயங்கரச் சம்பவம், மக்கள் உயிரைக் காக்க மாளாப் போரில் செந்நீர் சிந்தினன். ஆனல் தன் உயிரைக் காக்க அவன் ஒரு துளி கண்ணிரும் சிந்தவில்லை என்று மக்கள் மன்றம் பேசியது. எனினும் ஏதன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாற்ற முடியாதது. கண்டோர் வியக்க டிலோஸ் என்ற பெண்மணி அரசு செலுத்தித் தன் அதிகாரத்தை அலைகடலுக்கப் பாலும் தெரியச் செய்த இந்த நாடு அளித்த தீர்ப்பு தான, இந்த நாவண்மைக்காரன இறக்கவேண்டும். நினைக்கவே உடல் நடுங்குகிறது. சே! சே!! இந்த நாட்டில் இனி சுதந்திரக் குடிகள் என்று சொல்லிக் கொண்டு வாழ்வதைவிட, கந்தையுடுத்திக் கானகம் செல்லலாம். அங்கே புலிகள் இருக்கும். ஆளுல் மனிதர்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளும் மனச்சாட்சியே இல்லாத மனித மிருகங் களான இந்த மெலிடஸ்கள் இருக்கமாட்டார்கள். இப்படிப் பேசினர்கள் மக்கள், எனினும் தீர்ப்பு தீர்ப்பேதான். . - அறிவிப்பு - 'உனக்கு மரண தண்டனையளிக்க வேண்டு மென்று நீதியின் பிரதிநிதிகள் தங்கள் அதிகப்படி யான வாக்குகளால் அறிவித்துவிட்டனர், சாக்ரடீஸ்! மரணத்திலிருந்து நீ தப்புவதற்கு மார்க்கமில்லை. இறுதியாக நீ ஏதாவது சொல்லிக்கொள்வதாயிருந் தால், அல்லது உன் தண்டனையில் நீ ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/49&oldid=1331432" இலிருந்து மீள்விக்கப்பட்டது