உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

47


சி. பி. சிற்றரசு 47 பள்ளி மாணவன், பந்தய்த்தில் வென்றவன், பாக்களைக் கட்டியவன், பலரும்:பரிசு பெறுகின்றனர். அவ்வண் ணமே நான் பரிசு பெறத் தகுதியுடையவன். அந்த வகையில் நீங்கள் என் தண்டனையில் என் விருப்பப் படி மாற்றங் காண எண்ணில்ை, இதுவரை பல பெரிய மனிதர்களைக் கண்ணியப்படுத்தியதைப் போல என்னையும் நகரப் பொது மாளிகையில் வைத்துக் கெளரவப்படுத்தி, நகரப் பொதுச் செலவில் என்னைப் பாதுகாத்து வரவேண்டும் என்பதே என் விண்ணப்பம். அதுதான் தகுதியுடையதும் நியாயமானதுமாகும். ஆகவே அப்படிச் செய்யுங்கள். . இன்றேல், இன்னும் சிறிது நேரத்தில் உங்களில் வயதான ஒருவன் சாவின் சமீபத்தில் நிற்கப் போவதைக் கண்டு ரசிக்க இயற்கை உங்களுக்குத் துணைசெய்யப் போகிறது. நான் உங்களுக்காக மட்டிலும் பேசவில்லை. என் சாவுக்காக வர்க்களித் தவர்களுக்காகவும் பேசுகிறேன். என்னை மன்னித்து விடும்படி மன்ருடி மீண்டும் உயிர்வாழ ஆசை கொள்ளாத நான் உங்களிடம் தோற்றுவிட்டதாகக் கருதலாம். ஆனல், உண்மை யதுவல்ல, நான் தோற்றுவிட்டேன் என்பது என் வாதத்தால் அல்ல. நான் என் கருத்திலே கொண்ட அசையாத நம்பிக்கை யில் நான் தோற்றுவிடவில்லை. நீதி வழங்க நீங்கள் வீற்றிருக்கின்றீர்கள். குற்றவாளியாக நான் நிற்கின் றேன். என்னைச் சரியாக அடையாளந்தெரிந்து கொள்ள முடியாத ஒரு சாதாரண சக்தியால் தோற் கடிக்கப்பட்டேன் என்பதுதான் உண்மை. நான் உங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/52&oldid=1331435" இலிருந்து மீள்விக்கப்பட்டது