பக்கம்:விஷக்கோப்பை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

விஷக்கோப்பை


48 - விஷக்கோப்பை

களுக்காகவோ, என் சொந்த வாழ்க்கைக்காகவோ வாதாடவில்லை. உண்மையில்லாத ஒன்றை த் தொலைக்க வாதாடினேன். என் வாதத்தின் முடிவு என்னை எவ்வளவு பயங்கரமான கடலில் தள்ளுவதா லுைம் கவலை இல்லையென்று வாதாடினேன். நீதியைக் கொல்லும் ஆற்றல் அநீதிக்கு உண்டா என்று தெரிந்து கொள்வதற்காகவே வாதாடினேன். உலகில் புதிய செய்கையல்ல, இதற்குமுன் எவ்வளவோ அறிஞர்கள், மக்கள் அறியாமையாலும், ஆத்திரத் தாலும் மாண்டு போனர்கள். ஆனல் அச்சத்தோடு ஆண்டுகள் பல வாழ்வதைவிட ஆண்மையோடு விரைவில் இறப்பதுமேல் என்ற முறையிலே வாதாடி னேன். முதலில் கல்லால் அடிப்பவர்கள் பின்னல் மலர் மாலைகள் சூட்டுவார்கள் என்ற உறுதியோ நம் பிக்கையோ கொண்டு நான் வாதாடவில்லை என் மனம் சொன்ன வழி நடந்தேன். சிந்திக்கத் தொடங்கு வதற்கு முன்பு சீறித்தான் விழுவார்கள் மக்கள் என்ற முறை தெரிந்தே வாதாடினேன். என்னுடைய வாதங்கள் எப்போதும் பேரேட்டின் லாப நட்டங் களைத் தொட்டுக் கொண்டிருக்கவில்லை. மனித ஜீவா தார உரிமை வேட்கையில் உண்மையானதும், நித்திய மானதும், யாராலும் அழிக்க முடியாததும், எந்தக் காலத்திலும் அழியாததும், எந்தப் படையெடுப்புக் கும் அஞ்சாததும், எந்த பூகம்பத்தாலும் அசையாதது மான முடிவில்லாத தத்துவத்தின் முகத்தை நோக்கி நின்றுகொண்டிருக்கின்றது. அந்த உரிமைகளை வழங் கில்ை, மக்கள் விழித்துக் கொள்வார்கள். பிறகு நம் கதி அதோகதியாய்விடும் என்று பயப்படும் வஞ்சகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/53&oldid=1331436" இலிருந்து மீள்விக்கப்பட்டது