உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

57


சி. பி. சிற்றரசு 57 தீமை, ஒரு நல்லவனுடைய வாழ்விலும் சாவி லும் தொடர்வதில்லை. அவனுடைய நன்மைகளை ஆண்டவனும் நிராகரிப்பதில்லை. எனக்கு வந்திருக் கும் இந்த முடிவு மற்ற யாருக்கும் எதிர்பார்த்தும் வரக்கூடியதல்ல. எல்லாவித துன்பங்களிலிருந்தும் வி டு த லே பெறுவதற்காக எனக்கு இந்த நீதிமன்றத்தார் அளித்த மரண தண்டனைக்கு இணங்கிவிட்டேன். இந்த ஏழைக்கு இதைவிட ஒரு நல்ல சன்மானம் யாராலும் அளிக்க முடியாது. அன்புள்ள ஏதென்ஸ் நகரத் தோழர்களே ! உங்கள் விருப்பம்போல், அபராதத் தண்டனையை விதிக்கும்படி ஒரு வேளை நான் கேட்டுக்கொள்ளலாம். அது அவ்வளவு கெடுதலைத் தராது என்று நீங்கள் கருதுகிறீர்கள். இந்த வேண்டுகோள், என் உயிரை ஏதோ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலை மதிக் கிறேன் என்பதையே காட்டுகிறது. ஒரு வேளை நான் இன்னும் உயிரோடிருந்து மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகுதியானவற்றைச் செய்ய இந்த என் வேண்டுகோளும், அந்த வேண்டுகோளுக் கிணங்கும் உங்கள் தாராள சிந்தையும் பயன்படலாம் என்று என் மன்னிப்புக்காக வாக்களித்த உத்தமர்கள் எண்ணுவார்களாயின், அவர்கள் ஆசைதான் ஏன் நிராசையாக வேண்டும். அதையும் கேட்டு விடுகின் றேன். ஆனால், நான் வறியவன். என்னிடம் பொருள் அதிகமாகக் கிடையாது. பொருள் ஈட்டிச் சேமித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/62&oldid=1331445" இலிருந்து மீள்விக்கப்பட்டது