பக்கம்:விஷக்கோப்பை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

59


சி. பி. சிற்றரசு 59 உலகம் உங்களைத் துாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசை. காத்திருக்கலாமே இன்னும் சிறிது காலம் இவர்கள் காத்துக் கொண்டிருக்கக் கூடாதா. வயதான நான் இயல் பாகவே மாண்டு விடுவேன். என் விடுதலைக்காகப் பக்குவமாகப்பேச எனக்கு நாவண்மை இல்லை. அதனாலேயே நான் மரண தண்டனையடைந்தேன் என்பதும் உண்மையல்ல. நீங்கள் நினைப்பதுபோல் அழுது கதறி புலம்பி உங்களை வேண்டிக் கொள்ளும் துணிவு எனக்கில்லை. சாவுக்கு அஞ்சி யாரும் ஒடக் கூடாது. போரில் ஒருவன் ஆயுதங்களை வீசி எறிந்து எதிரியிடம் சரணுகதியடைந்து உயிர் பிழைக்கலாம். நீதிமான்களே! சாவிலிருந்து தப்புவது கடினமல்ல. அநீதியிலிருந்து தப்புவதுதான் கடினம். அநீதிக்கு சாவையும் மிஞ்சிய வேகம் உண்டு. நான் தள்ளாத வயதினன் வேகமாகச் செல்லும் அநீதியைவிட மெது வாகச் செல்லும் சாவு என்னைப்பற்றிக் கொண்டது. நாட்டில் இன்றிருக்கின்ற விதிப்படி எந்த ஒரு கடுமையான வழக்கையும் ஒரே நாளில் விசாரித்து அன்று மாலேயே தீர்ப்பளித்துவிட வேண்டும் என்ற நிலை இல்லாதிருந்தால் ஒரு வேளை நானே என் குற்ற மறுப்புக்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்க லாம். அப்படி இல்லாமலிருப்பதும் ஒரு நன்மைக்கு என்றே தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/64&oldid=1331447" இலிருந்து மீள்விக்கப்பட்டது