உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

61


சி. பி. சிற்றரசு 61 பிறகு முப்பதுபேர் கொண்ட அலிகார்கி சபை யார் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்கள் என்னையும் மற்ற நான்குபேரையும் ரெடொண்டா (வட்ட வடிவமுள்ள) அரசாங்கக் கட்டிடத்தில் அழைத்து சலாமிஸ் நாட்டைச் சேர்ந்த லியோன் என்பவனை அ ைழ த் து வ ர ச் சொன்னர்கள். அவனுக்கு மரண தண்டனையளிக்க வேண்டுமென்பது அவர்கள் எண்ணம். நான் அநீதிக்குப் பணிவது நேர்மையல்ல என்று வாய்ச் சொல்லால் மட்டிலும் சொல்லாமல் செயலிலே காட்டவேண்டி சலாமிசுக்குச் செல்லாமல் நேராக வீட்டிற்குச் சென்றுவிட்டேன். வலிமைமிக்க அந்த அடக்குமுறையாட்சிக்கு நான் தவறு செய்துவிடவில்லை. அந்த நான்கு பேர்களால் லியோன் என்பவன் அழைத்துவரப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். விரைவிலேயே அந்த முப்பது பேருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. இல்லாவிட் டால் நான் உயிரையே இழந்திருப்பேன். அது உண்மைதான் என்பதற்கு இங்கே அனேக சாட்சிகள் இருக்கின்ருர்கள். (நீதிமன்றத்தில் ஆரவாரம்.) சாக் : அருள்கூர்ந்து ஆரவாரம் செய்யாதீர்கள். நான் பேசி முடிக்கிறவரையிலும் அமைதியாயிருப்ப தாக ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். என்னே ஒருவனேக் கொன்ருல் அது உங்களுக்குத்தான் பெருந்தீங்காக முடியும். என்னை அது அவ்வளவாக பாதிக்காது. மெலிடஸ், அனிடஸ், லைகோன் இவர்களால் எனக்கு தீங்கு விளைவிக்க முடியாது. ஏனென்ருல், தீயவன் தன்னைவிட நேர்மையானவனை கொல்லும்படி யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/66&oldid=1331449" இலிருந்து மீள்விக்கப்பட்டது