பக்கம்:விஷக்கோப்பை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

விஷக்கோப்பை


62 விஷக்கோப்பை

அனுமதிக்க மாட்டார்கள். என்னைப்போன்றவனை அனிடஸ் கொல்லாம். நாடு கடத்தலாம். குடி யுரிமை இல்லாதபடி செய்துவிடலாம். அவரும் சரி, மற்றவர்களும் சரி. எனக்குப் பெருந்தீங்கு விளைவித்து விட்டதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. என் இறப்புக்குப்பின் எனக்கு மரண தண்டனை வழங்கிய நீதி மான்களே! சாகும் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்க்க தரிசனம் ஏற்படுவதுண்டு. அதை வைத் துப் பார்க்கும்போது என் இறப்புக்குப்பின் உங்க ளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப் போகிறது. இதுவரை நான் தடுத்து வைத்திருந்த வாலிபர்கள் உங்களைக் கடுமையாக தாக்குவார்கள். என்னை நடத்தியதைப்போல் அவர்களையும் நீங்கள் நடத்த முடியாது. ஏனெனில், அவர்கள் வாலிபர்கள். சாதாரண காரியங்களில் நான் தவறுதலாக நடக்க முற்பட்டாலும் ஒரு தெய்வ சக்தி என்னைத் தடுக்கும். இதோ முடிவாக வரும் சாவெனும் பெருந்தீங்கு நேர இருக்கிறது. அந்த மரணத்தைத் தடுக்கும் தெய்வ வாக்கு ஒன்றும் கேட்கவில்லை. சாவு என்ருல் ஒன்றுமே இல்லாத ஒரு நிலையாக இருக்க வேண்டும். இல்லை யென்ருல் நினைவிழந்த நிலையாக, ஒரு மாறுதலாக, நமது ஆவி இவ்வுலகத்திலிருந்து மறு உலகத்திற்குச் செல்வதாகவும் இருக்கலாம். நினைவே இல்லாதகனவிலும் கலையாத ஒருவித தூக்கநிலை அது என்ருல் அதைவிட நன்மை ஏது என்பதை எண்ணிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/67&oldid=1331450" இலிருந்து மீள்விக்கப்பட்டது