பக்கம்:வெறுந்தாள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 103 அந்த நூலைப்பற்றி விமர்சிக்கலாம் என்று நினைத் தேன்; அதில் தானே நாங்கள் ஒன்றுபட முடியும். அவனுக்கு அதில் கவனம் செல்லவில்லை. தனக்குத் திருமணம் என்று சொல்லிக் கொண்டு பத்திரிகை ஒன்று நீட்டினான். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. என் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். இதுவரை அவன் அவ்வாறு பார்த்தது இல்லை. நல்ல மாற்றம் என்று நினைத்தேன். அவனுக்கும் அந்தச் செய்தியில் நிறைய மகிழ்ச்சி வெளிப்பட்டது. அவளுக்கு நல்ல செய்தி என்றால் இதைப் போன்ற பத்திரிகை விளம்பரங்களே தவிர நான் நடத்தும் பத்திரிகை கள் அல்ல. முகூர்த்தப் பத்திரிகைகள், அழைப்புகள் இதில் அவள் ரசனை சென்றதே தவிர வாரப் பத்திரிகைகள் மாத வெளியீடுகள் அவற்றில் அவள் கவனம் செலுத்தியது இல்லை. எல்லாம் அவள் விரும்பும் செய்திகளே வீட்டில் வந்து குவிந்து கொண்டிருந்தன. இப்போது அவள் கேள்விகள் கேட்கத் தொடங் கினாள். 3. 'பெண் சொந்தமா' 'இல்லை. தூரத்து உறவு' இவன் கலப்புத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். 'ஏதாவது சொத்து' 'பரவாயில்லை. எல்லாம் சேர்ந்து ஐம்பதினாயிரம் கிடைக்கும். அறுபது சவரன், அது வேறு'. இவன் புதுமைக் கவிஞர் அல்ல என்பதைத் தெரிந்து கொண்டேன். y 'அவள் விதவை ஒன்றும் இல்லையே' என்று சந்தேகத்தோடு ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/104&oldid=914503" இலிருந்து மீள்விக்கப்பட்டது