உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வெறுந்தாள் ரொம்ப புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டதாக நினைப்பு. அதாவது சரஸ்வதியைப் போல யாராவது இவ னுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். மேலும் அவன் புதுக் கவிதை பாடும் புதுயுகம் புரட்சிக் கவிஞர் அல்லவா. அதனால் அந்த மாதிரி ஏதாவது இருக்கு மென்று அவள் நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. 'சே! அப்படி ஒன்றும் நான் மோசமாக நடந்து கொள்ளமாட்டேன்' என்று ஆறுதல் கூறினான். 'அதுதான் பார்த்தேன்; இந்த மாதிரி ஏதாவது. இது தான் இங்கு வருகிற கதைகள் பெரும்பாலும்' என்று என்காற்று அவளுக்குப் பட்டு இவ்வாறு பேசினாள். 'சே! அதெல்லாம் கதை எழுதுவதற்கு நன்றாக இருக் கும், போயும் போயும் விதவையையா கட்டிக் கொள் வார்கள்.' அவன் 'விதவையின் கண்ணிர் என்று பாடிய புதிய கவிதை என் மேசை மேல் கண்ணிர்விட்டுக் கொண் டிருந்தது. 'சீர்திருத்த மணம் என்று நினைக்கிறேன்' என்றாள். அதில் அவளுக்கு ஆர்வம் இருந்தது. மறுபடியும் என்னை மணமேடையில் உட்கார வைத்து அவளுக்குத் தாலி கட்டினால் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்தது. ஐயரே கூடாது என்று அறிவிப்பாள் போல இருந்தது. "என்ன பதிவுத் திருமணமா?' என்று தொடர்ந்து கேட்டாள். 'அப்படி எல்லாம் இல்லீங்க. அந்தப் பெண்ணின் அப்பா அப்படிப் பண்ணுவதுதான் நல்லது என்றார். நான் தான் முடியாது என்று கூறிவிட்டேன். 'வக்கு' இல்லாதவர்கள் தாம் அப்படிச் செய்வார்கள்' என்று விளக்கம் தந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/105&oldid=914504" இலிருந்து மீள்விக்கப்பட்டது