பக்கம்:வெறுந்தாள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 105 'பெண் எப்படி, கருப்பா சிவப்பா' 'சே கருப்பு என்றாலே எனக்குப் பிடிக்காதுங்க” 'சேரிப் பெண் என்ற கவிதை பரிசு பெற்ற கவிதை யாக இருந்தது. 'உன் கருப்பு நிற அழகில் என் கருத்தை இழந்தேன்' என்று பாடிய பாட்டின் அடிகள் என் கவனத்திற்கு வந்தன. 'பரவாயில்லையே' எல்லாம் எந்தக் குறையும் இல்லாமல் பொருந்தி இருக்கிறது.” "மொழி விலக்கு தானே?” 'அது எப்படிங்க விலக்க முடியும். பல பேருக்கு வருத்தமாக இருக்கும். கல்யாணப் பரிசைத் தவிர்ப்பது அவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கும்” என்றான். என் மனைவியின் வட்டத்தில் இந்த மாதிரி பேச்சு அடிபடுவதைக் கேட்டு இருக்கிறேன். அவர்கள் மொழி விலக்கி இருக்கிறார்கள். கவிஞர் விலக்கவில்லை. முன் னேற்றம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். 'எல்லாம் கைத்தறி ஆடைகள்தானே கல்யாணப் பெண்ணுக்கு” 'எட்டாயிரம் ரூபாயில் தகடு சேலைங்க. நான்தான் ஒற்றைக் காலில் நின்றேன். அதுக்குக் குறைந்து வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். எனக்குச் சூட்டுத் தைக்கச் சொல்லி ஐந்தாயிரம் தந்தார்கள். எல்லாம் உயர்ந்த ரகம் தானுங்க”. 'அரை மனிதன்' என்ற கவிதையை எழுதியிருந்தான். 'ஆடை என்ற சொல்லை எங்கோ கேட்டான். அது பாலாடையில் தான் இருக்கிறது ஆடைக்கு அவன் எங்கே போவான்? அவன் அரை மனிதன்தானே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/106&oldid=914505" இலிருந்து மீள்விக்கப்பட்டது